விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய விவோ எஸ்1 (Vivo S1) ஸ்மார்ட்போன் விற்பனையை இன்று முதல் துவங்குகிறது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனா சந்தையிலும், இந்தோனேஷியா சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ நிறுவனம் இன்று முதல் Vivo S1 ஸ்மார்ட்போனின் விற்பனையைத் பல சலுகைகளுடன் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் துவங்கியுள்ளது.
இன்று முதல் விற்பனை :
விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இன்று முதல் அமேசான், பிளிப்கார்ட், விவோ தளம், ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற தளங்கள் மற்றும் விவோ ஸ்டோர்களிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. முதற்கட்ட விற்பனையாக பல புதிய சலுகைகளையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
துவக்க விற்பனை சலுகை துவக்க விற்பனை சலுகையாக 7.5% கூடுதல் சலுகை எச்.டி.எப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.10,000 மதிப்பிலான கேஷ் பேக் சலுகையையும் வழங்கியுள்ளது. Paytm கேஷ் பேக் சலுகை மற்றும் வட்டி இல்லா தவணை போன்று பல சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிஸ்பிளே, பிராசஸர் மற்றும் பேட்டரி இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கும், இந்தியாவில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, பிராசஸர் மற்றும் பேட்டரி போன்றவை மாற்றப்பட்டுள்ளது.
விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் சிறப்பு:
விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் குளோபல் வேரியண்ட் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரிபிள் கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட் உடன் 4500 எம்.ஏ.எச் பேட்டரி உடன் கூடிய இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பாப் அப் கேமராவுடன் விவோ எஸ்1:
புதிய விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது. ஆனால் சீனாவில் பாப் அப் கேமராவுடன் கூடிய இன்பினிட்டி டிஸ்பிளேயுடன் விவோ எஸ்1 அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.
விவோ எஸ்1 சிறப்பம்சங்கள்:
6.38' இன்ச் முழு எச்.டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட்
4ஜிபி ரேம் / 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி /128 ஜிபி உள்ளடக்க ஸ்டோரேஜ்
எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூடிய FunTouch OS இயங்குதளம்
16 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் + 2 மெகா பிக்சல் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா
32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளே அல்லது இன்ஃபினிட்டி டிஸ்பிளே
இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
4ஜி வோல்ட்-இ
வைஃபை
ப்ளூடூத் 5.0
3.5 ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யூஎஸ்பி
4500 எம்.ஏ.எச் பேட்டரி
விவோ எஸ்1 விலை இந்திய சந்தையில் புதிய விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.17,990 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோல் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,990 என்ற விலையிலும், 6ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,990 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours