நியூயார்க்கில் நடைபெற்ற சாம்சங் அன்பாக்கிடு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் புதிய இரண்டு சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 

முதல் முறையாக சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் என்ற இரண்டு மாடல்களை ஒரே நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.



S-Pen பயன்பாட்டுடன் கேலக்ஸி நோட் 10 சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் எச்.டி.ஆர் 10 பிளஸ் (HDR10+) டிஸ்பிளேயுடன் கூடிய S-Pen பயன்பாட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8' இன்ச் கொண்ட டைனமிக் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் தான் மிகப் பெரிய டிஸ்பிளே ஸ்கிரீன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு போன்களிலும் டைனமிக் அமோலேட் டிஸ்பிளேயுடன் கூடிய எச்.டி.ஆர் 10 பிளஸ் சேவையுடன் கூடிய டைனமிக் டோன் மேப்பிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்டோரேஜ் இரண்டு புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் Exynos 9825 சிப்செட் பிரசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் LTE வேரியண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டாக உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் கொரியன் சந்தையில் மட்டும் 12ஜிபி ரேம் உடன் எஸ்.டி கார்டு சேவை இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 கேமரா தகவல் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது, 12 மெகா பிக்சல் கொண்ட டெலி போட்டோ லென்ஸ் கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா மற்றும் 16 மெகா பிக்சில் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இந்த கேமராகளுடன் சேர்த்து VGA டெப்த் விஷன் சென்சார் என்ற ஒரு சிறிய லென்ஸையும் ஃபிளாஷ் அருகில் பொருந்தியுள்ளது சாம்சங்.



சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் வேரியண்ட் தகவல் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன், 12ஜிபி ரேம் வசதியுடன் 256 ஜிபி வேரியண்ட் மற்றும் 512ஜிபி வேரியண்ட் என இரண்டு வேரியண்ட் மாடலாக 1TB எஸ்.டி கார்டு சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி சேவையுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் கொரியன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு இன்னும் அதிகாரப்பூர்வ பதில் கிடைக்கவில்லை.





சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் பேட்டரி தகவல் சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், 12W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.எச் பேட்டரியுடனும், சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 4300 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் கிடைக்கும் நிறங்கள் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆரோ க்ளோ, ஆரா வைட் மற்றும் ஆரா பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் பிங்க் நிறத்திலும் விற்பனைக்குக் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ப்ளூ நிறத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









இந்தியாவில் எப்பொழுது அறிமுகம்? அமெரிக்காவில் இன்று முதல் இரண்டு நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது, முன்பதிவு செய்த அனைவருக்கும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஷிப்பிங் செய்யப்படும் என்று சாம்சங் அறிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் என்ன அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுமென்று காத்திருக்கத் தான் வேண்டும்.














Share To:
Next
Newer Post
Previous
This is the last post.

Swiss uthayam News

Post A Comment:

0 comments so far,add yours