(க.விஜயரெத்தினம்)
தமிழ்தேசிய கூட்டமைப்பானது 2009ஆண்டுக்குப் பின்னர்தான் முழுநேர அரசியல்பணியை மேற்கொண்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பில் தெளிவூட்டும் கூட்டம் திங்கட்கிழமை(12) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தலைமைதாங்கி உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்இமற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்இமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபைஇமுன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம்இமட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்இ உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள்இபிரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
தந்தை செல்வா அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பானது தமது அரசியல்பணியை வடகிழக்கில் தமிழ்மக்களுக்காக முன்னெடுத்தபோதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலை முன்னாள் ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவிடல்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தமிழ்மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு யாரும் கரிசனை காட்டவில்லை.
இந்நிலையில் 36 தமிழ் இயக்கங்கள் விடுதலைக்காக போராடியது.அதன் பிற்பாடு இலைங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிற்பாடு 35 இயக்கங்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டன.பண்டா-செல்வாஇ டட்லி ஒப்பந்தங்கள் என்பன தமிழ்மக்களுக்கு எதுவித தீர்வையும் பெற்றுத்தரவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டும்தான் இறுதியாக தமிழ்மக்களுக்காக போராடியாது.இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ்மக்களுக்காக 26 வருடங்கள் போராடி 2009ஆண்டில் மௌனித்து விட்டது.அதன் பிற்பாடுதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழுநேர அரசியல் பணியை முன்னெடுத்தது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்பணியை முன்னெடுக்க இந்நாட்டில் பெரும்தேசிய கட்சிகள் பெரும்தடையாகவும்இசவாலாகவும் இருந்து வருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழினப்படுகொலைகளை செய்த ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு முழுமையாக எதிர்த்து தோற்கடித்தது எனத் தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours