எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி கே20 (Android Go )ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சாதரமாகத் தான் உள்ளது.
அசத்தலான டிஸ்பிளே: எல்ஜி கே20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 480 * 960 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட சிப்செம் வசதி: எல்ஜி கே20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சேமிப்பு வசதி: இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேமரா வசதி: எல்ஜி கே20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
பேட்டரி மற்றும் விலை: எல்ஜி கே20 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 3.5ஹெட்போன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.7,100-ஆக உள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours