(எஸ்.குமணன்)
தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2ஆவது தலைவரது மகன் அம்பாறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு வெள்ளிக்கிழமை(16) அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து கைதானவர் 16 வயது மதிக்கத்தக்க குருநாகல் ஹெக்குனுகொல்ல பகுதியை சேர்ந்த முஹமட் நௌபர் அப்துல்லா என்பவராவார்.
தீவிரவாதி சஹ்ரானினால் நுவரெலியாவில் நடாத்தி செல்லப்பட்ட இராணுவ பயிற்சியில் இணைந்து கொண்டு பயிற்சியை மேற்கொண்டிருந்ததாக இவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் தற்கொலை தாக்குதலில் இறந்த ஷஹ்ரானிற்கு அடுத்த நிலை 2ஆவது தலைவராக மௌலவி முகமட் நௌபர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours