(சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசபைக்குட்பட்ட பல கிராமங்களில் மக்கள் பாரிய குடிநீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 5ஆம் மாதம் முதல் குழாய்நீர்விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுவருகிறது .
திருக்கோவிலி; பிரதேசத்திலுள்ள கஞ்சிகுடிச்சாறு காஞ்சிரன்குடா தங்கவேலாயுதபுரம் ஸ்ரீவள்ளிபுரம் மண்டானை குடிநிலம் சாகாமம் தாண்டியடி நேருபுரம் பொத்துவில்பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டி மணற்சேனை கோமாரி களுகொல்ல போன்ற பிரதேசங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சங்குமண்டியைச்சேர்ந்த சந்திரகுமார்யுவசுதா மற்றும் சாமித்தம்பி இராஜேஸ்வரி ஆகியோர் கருத்துரைக்கையில்:
இங்குள்ள கிணறுகள் யாவும் வற்றிவிட்டன. வவுசரில் தண்ணீர்தருகிறார்கள். 2வூளி தருவது போதுமானதல்ல. 200ருபாவுக்கு சோறு வாங்கிச்சாப்பிட்டால் எங்களை நம்பிவீட்டிலிருக்கும் நாய் பூனனைகு சோறுஇல்லை. நாம்காட்டுப்பிள்ளையார்கோயில்கி ணற்றில் குளபோம். அதுவும் வற்றிவருகிறுது. தேர்தலுககு வந்த எம்.பி. தம்பிமாரை இப்போது காணமுடிவதில்லை. தமிழரின் தலைவிதி அதுதான் என்றாhத்கள்.
திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பொதுமக்கள் குடிநீரின்றி அலைவதாக தகவல்கள் கிடைக்கின்றனவே . அதுபற்றி என்ன தெரிவிக்கிறீர்கள் என்று திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜனிடம் கேட்டபோது அவர் இவ்வாறுதெரிவித்தார்;.
எமது பிரதேசத்திற்கு பிரதானமாக குடிநீரை விநியோகிக்கின்ற சாகாமம் நீர்சுத்திகரிப்பு மையம் கடந்த 3மாதகாலமாக குழாய்நீர்விநியோகத்தை நிறுத்தியுள்ளது. சாகாமக்குளத்தில் தண்ணீர் வற்றிப்போனமையே அதற்குக் காணரம்.
குறிப்பாக குழாய்நீர்விநியோகம் அரையும்குறையுமாகவுள்ள அதாவது 40வீதத்தைப்பெறும் கஞ்சிகுடிச்சாறு காஞ்சிரன்குடா தங்கவேலாயுதபுரம் ஸ்ரீவள்ளிபுரம் மண்டானை குடிநிலம் சாகாமம் தாண்டியடி நேருபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒருதுளி தண்ணீர்கூட இல்லை.
இவர்களுக்கு பிரதேசசபையும் பிரதேசசெயலகமும் இணைந்து 2 நீர் பவுசர்களில் மக்களுக்கு குடிநீரை மட்டும் வழங்கிவருகின்றது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையும் 2பவுசரில் குடிநீர் வழங்கிவருகின்றது. நாம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது பாடசாலைகள் ஆஸ்பத்திரிகளுக்கும் குடிநீர்வழங்கவேண்டும்.
நாம் அக்கரைப்பற்று 2ஆம் கட்டையடிக்குச் சென்று பவுசரில் இந்த தண்ணீர்கொண்டுவரப்படுகின்றது. இதனால் நாளொன்றுக்கு 2 தடவைகள்தான் கொண்டுவரமுடியும்.
மேலும் வழங்கப்படும் குடிநீர் அவர்களுக்கு குடிப்பதற்குக்கூட போதுமானதல்ல. ஏனைய குளிப்பு மலசலப்பாவனை உடுப்புத்துவைத்தல் போன்ற இன்னொரன்ன தேவைகளுக்கு அந்த மக்கள் நீண்டதூரம் சிறுகுளங்களை நாடவேண்டியுள்ளது. அவையும் தற்போது படிப்படியாக வற்றிவருகின்றன.
இதேவேளை குழாய்நீர் விநியோகத்தில் 60வீதமான வழங்கலைப்பெறும் தம்பட்டை தம்பிலுவில் திருக்கோவில் வினாயகபுரம் போன்ற கிராமங்களில் ஆங்காங்கே சொந்தக்கிணறுகளிருப்பதனால் ஒருவாறு சமாளித்துவருகின்றார்கள். வரட்சி நீடித்தால் அவர்களும் மேற்சொன்ன பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள்.
இதேவேளை பொத்துவில் பிரதேசசபைத்தவிசாளர் எ.எம்.வாஸித்திடம் இபற்றி கேட்டபோது அவர் இவ்வாறுதெரிவித்தார்.;.
எமது பொத்துவில்; பிரதேசத்தில் சுமார் 10ஆயிரம் பேர் மிகமோசமாகப்பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களுக்கு பூரணமாக குடிநீரை விநியோகம் செய்ய எமது சபையிடம் போதுமான பவுசர் வாகனவசதிகள் இல்லை
பொத்துவில்பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டி மணற்சேனை கோமாரி களுகொல்ல போன்ற பிரதேசங்களில் ஒருதுளி தண்ணீர்கூட இல்லை.
இவர்களுக்கு பிரதேசசபையும் பிரதேசசெயலகமும் இணைந்து 4 நீர் பவுசர்களில் மக்களுக்கு குடிநீரை மட்டும் வழங்கிவருகின்றது.
நாம் இருசாராரும் 7 கிராமங்கள்வீதம் பிரித்து பவுசர்களில் மாறிமாறி நீரை வழங்கிவருகிறோம். கோமாரி உறுப்பினர் சுபோதரன் விடுத்தவேண்டுகோளுக்கமைவாக கோமாரி சங்குமண்கண்டி மணற்சேனை போன்ற தமிழ்ப்பகுதிகளுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குடிநீரை வழங்கிவருகிறோம். இதுமக்களுக்கு போதுமானதல்ல. எனினும் எம்மால்முடிந்தளவு நீரை வழங்கிவருகிறோம். என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours