கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் 75 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சாத்தியம் காணப்படுவதுடன் 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடற்பகுதிகளில் அதிக காற்று வீசக்கூடிய நிலை காணப்படுவதனால் மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours