(சிரேஷ்ர ஊடகவியலாளர் .வி.ரி.சகாதேவராஜா )



 ‘எம்முடன்கடந்தஒருவருடமாகபேராட்டத்திலீடுபட்டுவந்தவர்களுள் ஜந்துபேர் தமக்கு காணி கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் மரணத்தைத் தழுவியுள்ளனர். அவர்களதுஆத்மா சாந்திக்காக நாம்ஒருவருட பூர்த்திதினத்தை துக்கதினமாக அனுஸ்ட்டிக்கிறோம்.’
365ஆவது நாளில்  கனகர்கிராம மீள்குடியேற்றசங்கத்தலைவி புஞ்சிமாத்தயா றங்கத்தனா மேற்கண்டவாறு  கூறினார்.
அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் ஊறணி எனுமிடத்தில்; கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப்போராட்டம் தொடங்கி நேற்றுடன் 365ஆவது நாளாகிறது. அவர்கள் கடந்த வருடம் 2018.08.14ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இற்றைக்கு 58வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்துவந்த தமது காணிகளைக்கோரி அந்த மக்கள் போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர். 1960களில் சுமார் 278குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள்  பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாhரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30வீடுகளைக்கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.
1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28வருடங்களாக அங்கு  வனபரிபாலனஇலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.
எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.  அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்கிறது.
அவர் மேலும்கூறுகையில்:
அரசியல்வாதிகளின் உறுதிமொழிகள் செல்லாக்காசாகவே இருப்பதாகத் தெரிகிறது.  பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் ஆகியோர் எமது கோரிக்கைக்கு செவிசாய்த்து வருகின்ற போதிலும் வனபரிபாலன திணைக்களமே இடையூறு செய்கிறது.
அத்துடன் அரசாங்க அதிபர் மட்டத்தில் காணிகளுக்கான ஆவணங்கள் பரிசிலிக்கப்பட்டுள்ளதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தால் 172 பேரின் பெயர் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
தாம் இங்கு வாழ்ந்தமைக்கான சகல ஆவணங்களும் இருக்கின்ற போதிலும் பல்வேறுபட்ட சாட்டுப்போக்குகளை அரசாங்கம் கூறிக்கொண்டு தம்மை தொடர்ந்தும் அகதிகளாக வீதி ஓரத்தில் வைத்து வேடிக்கைப் பார்க்கிறது.
தம்பிப்பிப்பிள்ளை பரமேஸ்வரி(வயது55) கூறுகையில்:
எமது அரசியல்வாதிகள் அதைப்பெற்றுத்தருவோம் இதைப்பெற்றுத்தருவோம் என்று வீரவசனம் பேசுவார்கள். இறுதியில் அபிவிருத்தியுமில்லை உரிமையுமில்லை என்ற கையறுநிலைக்குச்சென்றுள்ளமை வேதனைக்குரியது. எமது பிரச்சினையொன்றே போதும் இலங்கைவாழ்தமிழ்மக்கள் சிந்திப்பதற்கு. இலங்கையின் இன்றைய நிலைமை அதற்கு நல்ல சாட்சி.
நாம் பூர்வீகமாக வாழ்ந்துவந்த காணியையே கோருகின்றோம். மரணித்தாலும்; இந்த இடத்திலேயே மரணிப்போம்.தவிர போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்.
நுளம்புக்கடிக்குமத்தியிலும் மலைப்பாம்புகளுக்கு மத்தியிலும் உறங்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை எமக்கு. எனினும் காணிகிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன் இருக்கிறோம்.
நாம் இங்கு  பூர்வீகமாக வாழ்ந்துவந்ததற்கு இங்கிருப்பவர்கள்; மட்டும் சாட்சியல்ல. இந்த உடைந்துதகர்ந்துகிடக்கும் வீடு வாசல்கள் மட்டும் சாட்சியல்ல. மாறாக இந்த மாவட்டத்தில் வாழும் சகோதர சிங்கள முஸ்லிம் மக்களும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.

யார் என்ன சொன்னாலும் எமக்கு நிரந்தரமான எழுத்துமூல தீர்வுகிடைக்கும்வரை இந்த இடத்தைவிட்டு அகலமாட்டோம். என்றார்.
கந்தையா சதாசிவம்(வயது 72) கூறுகையில்:
எமது போராட்டம் 365 நாட்களைத்தாண்டுகின்றபோதிலும் நாம் சற்றும் மனம் தளரவில்லை. இங்கு 278குடும்பங்கள் பூர்;வீகமாக வாழ்ந்துவந்தோம். இந்த 60ஆம் கட்டையில் 1238ஏக்கர் காணியுண்டு. நாம் இங்கு கேட்பது நாம் வாழ்ந்த காணியையே தவிர வேறெவரினதுமல்ல.
நாம் ஒவ்வொருவரும் இரண்டரை ஏக்கர் நிலத்துடன் வாழந்துவந்தவர்கள். 2ஏக்கர் சேனைப்பயிர்ச்செய்கைக்கும் அரை ஏக்கர் வீட்டிற்குமாக தந்துதான் எம்மை முன்னாள் எம்.பி. எம்.சி.கனகரெத்தினம் ஜயா எம்மை 30 நிரந்தரவீடுகளில் குடியேற்றினார்.
நேற்றுமுன்தினம் திருக்கோவிலுக்கு எமது சுமந்திரன் கோடீஸ்வரன் போன்ற தமிழ்த்தலைவர்கள் வந்துபோனதாக கேள்விப்பட்டோம். ஒரு பத்து நிமிடத்தில் இங்குவந்து எம்மைப்பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் இந்தப்பக்கமேவராமல் சென்றிருப்பது வேதனையாகவுள்ளது.
ஜனநாயகத்தைக்காப்போற்றுவோம்ஆட்சியைகாப்பாற்றினோம் என்பார்கள் ஆனால் சொந்த தமிழ்மக்கள்வாழ்ந்த காணியைக்காப்பாற்ற பின்னடிப்பதேனோ? என்றுதெரியவில்லைநாம்வாக்களித்தவர்கள் கூட ஏன்இவ்வாறு நடக்கிறார்களோ தெரியாது.
கண்ணுக்குமுன் நாம் வாழ்ந்த பூமியில் இன்று நாம் வாழ்வதற்கு இப்படி போராடவேண்டிய துர்ப்பாக்கியநிலை. என்றார்.
அங்கு அடிக்கடி விஜயம்செய்து உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்;
கடந்தகால அரசுகள் தமிழ்மக்களுக்கு எந்தஉரிமையையும் வழங்கவில்லை. இன்றைய நல்லாட்சியாவது எதையாவது செய்யும் என எதிர்பார்த்தோம்.

ஓடாத மானும் போராடாத இனமும் வாழமுடியாது  என்பது கருத்து. எனினும்தாயகத்தில் தொடர்ச்சியாக போராடும்இனமாக தமிழினம் மாறியிருப்பதும் அரசு அதனைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் அதிர்ச்சியாகவுள்ளது.
நீங்கள் யானையோடும் நுளம்போடும் மலைப்பாம்போடும் போராடி இங்கு மழையிலும்வெயிலிலும் கிடந்து துன்பப்படுகிறீர்கள்.

365நாட்களைக்கடந்தும் தங்களின் நியாயமானபோராட்டத்திற்கு தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை எனும்போது மிகவும் வேதனையாகவிருக்கிறது.இந்தநாட்டில் தமிழருக்கு மட்டும் தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்?
நான்இங்கு 39ஆவது தடவையாக வந்துஉங்களைச்சந்திக்கிறேன். இந்த நாட்டில் ஏனையஇனமக்கள் எதையாவது கோரிப்போராடினால் ஒரிரு நாட்களுள் அரசாங்கம் தீர்வைவழங்கிவிடும். ஆனால் தமிழ்மக்கள் மட்டும் வருடக்கணக்கில் உய்மையாகப்போராடினாலும் தீர்வு இழுத்தடிக்கப்பட்டுவ ருகிறது. இது வேதனைக்குரியது.
இதற்;கு என்னகாரணம்? அரசாங்கம் திட்டமிட்டு புறக்கணிக்கிறதா? அல்லதுதமிழ்த்தலைமைகளின் பொடுபோக்குத்தனமா? என்பதுபுரியாமலுள்ளது.

அம்பாறைமாவட்டத்தமிழர்கள்எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவ்வாறு தீர்வு இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. கல்முனை வடக்கு பிரதேசசெயலகதரமுயர்த்தல்விவகாரம் வட்டமடுப்பிரச்சினை மல்லிகைத்தீவு நச்சுநீர் விவகாரம் தொட்டாச்சுருங்கிவட்டைப்பிரச்சினை அதேபோல் கனகர்கிராம காணிமீட்புப்போராட்டம் போன்ற எந்தவொரு பிரச்சினைக்கும்தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
இன்று நாட்டில் ஜனாதிபதிதேர்தல்பற்றி அனல்பறக்கும் கதைகள் தினம் தினம்ஊடகங்களில் வலம்வருகின்றன. மஹிந்தவா? ரணிலா? யாருக்கு வாக்களிப்பது? ஜ.நா.தீர்வை அமுல்படுத்துபவருக்கு தமிழ்மக்கள்வாக்களிப்பார்கள் ;என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் இங்கு தமிழ்ப்பெண்கள்வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு போராடிவருவது அவர்கள்கண்களுக்குத் தெரியவில்லை. தாம்பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தையே கேட்கிறார்கள். தவிர மாற்றான் காணியையோ அரசகாணியையோ கேட்கவில்லை.
இங்கு நீங்கள் சொல்கின்ற கருத்துக்களைக்கேட்கின்றபோது தமிழ்த்தலைமைகள்கூட உங்களை ஏறெடுத்தும்பார்க்காதநிலை இருப்பதாகத்தெரிகிறது. நேற்று இப்பிரதேசத்திற்கு வந்த தமிழ்த்தலைமைகள் இங்குவரவில்லை என்றுஆதங்கப்பட்டீர்கள்.
காணியே இன்னும் விடுவிக்கப்படாதநிலையில் இங்கு 150வீடுகளை கட்டப்போகிறார்களாம். என்னசெய்வது தமிழரின் தலைவிதி இவ்வாறான கதைகளெல்லாம் கேட்பதற்கு..
நான்மக்களுக்குச்சேவை செய்யவே அரசியலுக்குவந்தேன். ஆனால் இப்போது சிந்திக்கிறேன். என்னால் மக்களை ஏமாற்றமுடியாது.
இந்த நல்லாட்சியைக்கொண்டுவர தமிழ்மக்களின் பங்களிப்பை அனைவரும் அறிவார்கள். மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என தமிழ்மக்கள் நினைத்தார்கள். அதன்பலாபலனே அது. யாரும் சொல்லி வாக்களிக்கும் நிலையில் தமிழ்மக்கள்இன்றில்லை.
அதேபோலத்தான்இன்றைய ஜனாதிபதித்தேர்தலிலும் யாரைக்கொண்டுவரவேண்டும் என தமிழ்மக்கள் தீர்மானிப்பார்கள். அதன்படி அது நடக்கும். ஒன்றில் பேய் அல்லது பிசாசு.அவ்வளவுதான்.
நல்லாட்சிஜனாதிபதி தமிழ்மக்களுக்கு செய்த கைங்கரியத்தை நாமறிவோம். எனவே சிந்தித்துச்செயற்படுவோம்.இனியும் யாரும் ஏமாற்றாமல் சுயபுத்தியுடன் செயற்படுவோம்.என்றார்.

எதிர்வரும் மாரிக்கு முன்பாக இந்த ஏழைத்தமிழ்மக்களின்  வாழ்வில் ஒளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைஎடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours