(த.தவக்குமார்)
கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளாராக நிறுத்தக்கோரி மட்டக்களப்பு (எஸ்.பீ.ஜீ) அணியினரின் ஏற்பாட்டில் மாபெரும் நடைபவனி பேரணி மட்டக்களப்பு மாவட்ட எஸ்.பீ.ஜீ அணியின் தலைவரும்,அமைச்சின் இணைப்பாளருமான ம.ஜெகவண்ணன்அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.  

இந்தப் பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கிய எஸ்.பீ.ஜீ அணியின் உறுப்பினர்கள்  கட்சி ஆதரவார்கள் அமைச்சின் ஊடக இணைப்பாளர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து நிறப்பித்தனர்.இப்பேரணியானது மட்டக்களப்பு நகர பிரதான வீதியூடாக பதாதைகளை ஏந்தியவாறு எஸ்.பீ.ஜீ அணியின் உறுப்பினர்கள் சென்றனர்.










Share To:

Post A Comment:

0 comments so far,add yours