பாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிட விரும்புவதில்லை ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு இருமுறை சேர்த்து வந்தால் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும்.

பாகற்காயை ஒருவர் வாரம் இருமுறை உணவில் சேர்ப்பது மட்டுமின்றி ஜூஸ் தயாரித்து தேன் கலந்து வாரத்திற்கு இருமுறை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.



பாகற்காய் ஜூஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். வலிமையை அதிகரிக்கும், எனவே உடலின் ஆற்றலை அதிகரிக்க கண்ட எனர்ஜி பானங்களைப் பருகாமல் பாகற்காயை சாப்பிடலாம்.

பாகற்காய் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours