(த.தவக்குமார்)
வாழைச்சேனை கடதாசி ஆலையின் எதிர்கால செயற்பாடுகள் சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பானருமான சோ.கணேசமூர்த்தி தலைமையில் கடதாசி ஆலையின் கேட்போர் கூட கட்டிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடதாசி ஆலையின் முகாமையாளர்,அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, மற்றும் மலேசியா நாட்டின் (VIP Success) நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர்.நெல்சன்-முருகன்,முகாமைத்துவ பணிப்பாளர் விபுணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கடதாசி ஆலையினை விரைவில் இயக்குவதற்கான ஆலோசனைகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களை  மீண்டும் இயக்குவதற்கான தொழிஙட்ப வளிகள் பற்றிய கருத்துக்களை (VIP Success) நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர்.நெல்சன்-முருகன் அனைவரிடமும் எடுத்துக் கூறினார்.அத்தோடு இந்த ஆலையினை இயக்குவதற்கான நிதிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது பற்றியும் இக்கலந்துரையாடலின் போது பேசப்பட்டது.

















Share To:

Post A Comment:

0 comments so far,add yours