கோலியை விட ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சிறந்தவர்தான் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ராபர்ட் கீ கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், அண்மையில் முடிந்த உலக கோப்பையில் அசத்தினார். அதுமட்டுமல்லாமல் தற்போது ஆஷஸ் தொடரில், கலக்கி வருகிறார் ஸ்மித். பர்மிங்ஹாமில் உள்ள எட்பக்ஸன் மைதானத்தில் நடந்துவரும், ஆஷஸ் தொடரின் முதல் இன்னிங்ஸில் 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை, 284 ரன்களை நோக்கி அழைத்துச் சென்றார்.


டெஸ்டில் 24வது சதம் 
அந்த ஆட்டத்தில்தான், தனது வெற்றிகரமான 24வது டெஸ்ட் சதத்தை 118 இன்னிங்சில் அடித்தார். அதன் மூலம், 2ம் இடத்தில் இருந்த கோலியை பின்னுக்கு தள்ளினார். பின்னர் ஆஷஸ் தொடரின் 2வது இன்னிங்சில், 142 ரன்கள் குவித்தார்.


விடியல் கிறிஸ்துமஸ் 
எனினும் இந்த ஆட்டத்தில் தனது 25வது டெஸ்ட் சதத்தை விளாசினார். அப்போது பேசிய ஸ்மித், தமது கனவாக இருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒவ்வொரு நாளின் விடியலும், கிறிஸ்துமஸ் போல் உள்ளது என்றார்.


25வது சதம், சாதனை 24வது சதத்தை அடித்த, அதே தொடரின் அதே ஆட்டத்தின் அடுத்த இன்னிங்சில், (ஸ்மித்தின் 119வது இன்னிங்ஸ்) தனது 25வது சதத்தை எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடிக்கும் வீரராக ஸ்மித் புகழ்பெற்றுள்ளார். அப்போது முதல் கோலிக்கு இணையான போட்டியாளர் இவர் தான் என்று கருத்துகள் பறந்தன.

டுவிட்டர் கருத்து 
அதற்கு மாறான கருத்துகள் வெளிப்பட்டன. கோலிக்கு மாற்று இவர் தான் இங்கிலாந்து முன்னாள் வீரர் ராபர்ட் கீ கூறியிருக்கிறார். தமது டுவிட்டரில் இதை கூறியுள்ளார். கோலியை விட ஸ்மித் சிறந்தவர்தான் என்று முன்னாள் வீரர் ராபர்ட் கீ டுவிட்டரில் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Share To:

Swiss uthayam News

Post A Comment:

0 comments so far,add yours