(டினேஸ்)
மட்டக்களப்பு புளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாநாகரசபையின் ஒத்துழைப்புடனான சிரமதான நிகழ்வொன்று இன்றைய தினம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கு.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாநகரசபை புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், திருப்பெருந்துறை வட்டார உறுப்பினர் மா.சண்முகலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவருமான வெ.இராஜேந்திரபிரசாத், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் ரா.கோபிராஜ் உட்பட உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், சனசமூக நிலையத்தினர், பொதுமக்கள், மாநகரசபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட வாவிக்கரை வீதி 02 வாவியோரம் மிகவும் பற்றைக் காடுகளாகவும், பல்வேறு தரப்பினரும் குப்பைகளை வீசும் பகுதியாகவும் காணப்பட்டு வருகின்றது. இதன் நிமித்தம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் முயற்சியின் மூலம் மாநகரசபை உறுப்பினர் மற்றும் மாநகர முதல்வரின் ஒத்துழைப்புடனும் மாநகரசபை ஊழியர்களின் பங்குபற்றுதலுடனும் இச் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பிரதேசம் பற்றைக் காடுகள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகின்றமையால் இங்கு பல்வேறு தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், இப்பிரதேசத்தினை அதிக கண்காணிப்புக்கு உட்படுத்துவதுடன் உரிய நேரங்களுக்கு இவ்வாறான துப்பரவு செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது மக்கள் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours