(த.தவக்குமார்)

கிழக்குமாகாணத்தில் சுவசெரிய என்ற இலவச அம்பியூலன்ஸ் ஆரம்பிப்பதற்காக தேவையான அம்பியூலன்ஸ் வாகனங்களை வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகர் ரஞ்சித்சிங் அவர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை திகாமடுவையில்  அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த அம்பியூலன்ஸ் வாகனங்கள் அண்மையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிகமான பொலிஸ் நிலையங்களுக்கு மக்களின் இலவச சேவைகருதி வழங்கப்பட்டது. ஆனால் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு இந்த அம்பியூலன்ஸ் வாகனம் வழங்கப்படவில்லை இந்த பொலிஸ் பிரிவினை உள்ளடக்கிய அதிகமான பின்தங்கிய கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

குறிப்பாக படுவான்கரை பிரதேசமே இது. இரவு வேளைகளில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற திடீர் நோய்கள்,விபத்துக்களில் இருந்து கல்முனை,களுவாஞ்சிகுடி போன்ற வைத்திய சாலைகளுக்கு இவர்களை எடுத்துச் செல்வதற்கு இந்த பிரதேசத்திற்கு ஒரு அம்பியூலன்ஸ் வாகனம் தேவையாக இருக்கின்றது.

எனவே உரிய அதிகாரிகளோ,அரசியல் வாதிகளோ இந்த சேவையினை பொற்றுக்கொடுப்பதற்கு முன்வராமல் இருப்பது இப்பிரதேச மக்களுக்கு கவலையழிப்பதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தப் பிரதேசத்திற்கும் ஒரு அம்பியூலன்ஸ் வாகனத்தினை பெற்றுக் கொடுக்க உரியவர்கள் முன்வரவேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.




Share To:

Post A Comment:

0 comments so far,add yours