(சதீஸ்)
மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட எருவில் சூரியாமில்  வீதி மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாக கவனிப்பாரற்றுக் கிடந்து வந்த நிலையில் அப்பகுதி மக்களும், சிகை ஒப்பனைக் கூட்டுறவுச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் விடுத்த கோரிக்கைக்கிணங்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜின் சொந்த நிதியிலிருந்து இவ்வீதி சனிக்கிழமை(17) மோட்டார் கிறைன்டர் இட்டு செப்பனிட்டு, மேலும் கிறவல் இட்டு புரரமைப்புச் செய்வதற்ககுரிய ஆரம்பக்கட்ட வேலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வீதியை எருவில், மகிழூர், குருமண்வெளி, ஆகிய பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வீதி மிக நீண்ட காலமாகவிருந்து பள்ளமும் மேடுமாக காணப்படுகின்றது. மழைகாலங்களில் இவ்வீதியினால் முற்றாக பயணம் செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் இன்னலுற்று வருவதாக தம்மிடம் விடுத்த கோரிக்கைகிணங்க தான் தனது சொந்த நிதியில் இவ்வீதியைச் செப்பனிடுவதாக பிரதே சபை உறுப்பினர் மே.வினோராஜ் இதன்போது தெரிவித்தார்.

தமது கோரிக்கைகிணங்க தமது நீண்காலத் தேவையாக இருந்து வருகின்ற இந்த சூரியாமில் வீதியைச் செப்பணிட்டுத்தரும் பிரதேச சபை உறுப்பினருக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அப்பதி மக்களும், சிகை ஒப்பனைக் கூட்டுறவுச் சங்கத்தினரும் தெரிவித்தனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours