எரிபொருட்களின் விலை (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோல் 1 லிட்டரின் விலை 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 128 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 163 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 லிட்டர் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 134 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours