ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின், தியகல பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுபடுத்தப்பட்டுள்ளது.
கினிகத்தேனை, தியகல பகுதியில் உள்ள மண்மேடு பகுதியே இவ்வாறு சரிந்துள்ளது.
மண்சரிவு காரணமாக, இன்று பிற்பகல் பல மணி நேரம் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில், கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஹட்டனிலிருந்து செல்லும் வாகனங்களை நாவலப்பிட்டி, தலவாக்கலை மற்றும் கலுகல, லக்சபான ஆகிய மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours