(    ரனா )

அம்பாறை கல்முனை பிராந்திய சிக்கன கடன் உதவி கூட்டுறவு சங்க சமாசத்தின் புதிய பணிப்பாளர்களை ஊடகவியலாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற சம்பிரதாய வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்முனையில் உள்ள சமாச தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.


 புதிய தலைவர் எஸ். லோகநாதன் தலைமை உரை ஆற்றியபோது இச்சமாசம்கூட எமக்கு இலகுவாக கிடைத்த ஒன்றல்ல, இதைக்கூட போராடித்தான் தமிழர்கள் பெற நேர்ந்தது, ஆயினும் இதன் செயற்பாடுகள், சேவைகள் ஆகியவற்றுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டி உள்ளது, இதற்கான முன்னெடுப்புகள், முயற்சிகள் ஆகியவற்றை எனது தலைமையிலான பணிப்பாளர் சபை அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் முடுக்கி விட்டு உள்ளது, தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இச்சமாசத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்கு முடிந்த பங்களிப்புகளை தவறாமல் வழங்க வேண்டும் என்றார்.

புதிய பணிப்பாளர் சபை விபரம் வருமாறு

தலைவர் - தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன்

உப தலைவர் - ரி. ரூபாகரன்

செயலாளர் - கோமதி இரவீந்திரராஜா

இயக்குனர் சபை உறுப்பினர்கள் 

எஸ். கௌரிதேவி
எஸ். லோகநாயகி
என். மாணிக்கலெட்சுமி
கே. சாந்தி
எம். யூடி மெரினா
கே. கேணுஜா
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours