த.தவக்குமார்
ஐ.தே.கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி
அண்மைக்காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கருத்தரங்குகள் மக்களுடைய பிரச்சனைகளை மையமாக கொண்டதாக அமையவில்லை எனவும் இது அபிவிருத்தியடைந்துள்ள எங்களது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் கருத்தரங்குகளே இதுவென ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அதரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்றைய அரசியல் நிலவரம் பற்றி கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையிலே
காலத்துக்கு காலம் தேர்தல்கள் வரும் போது தமிழ் தேசிய உணர்வுகளை மக்களிடையே பரப்பிவருவது வழமையானது. இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டார்கள். அதுமட்டும்மல்லாமல் இவர்கள் அனைத்து வசதிகளையும் உதவிகளையும் பெற்று விட்டு தற்போது வெளியில் வந்து பிரச்சார மேடைகளில் ஐக்கிய தேசிய கட்சியினை பற்றி பிழையான கருத்துக்களை கூறுகின்றார்கள் மேடைகளில் ஒருகருத்து அவர்களுடன் தனியாகபேசும் போது ஒரு கருத்தினை கூறிவருகின்றார்கள்.இதுதான் அவர்களின் அரசியல் கொள்கைகள்.இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படித்த கல்விமான்கள்,புத்திஜீவிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
காலத்துக்கு காலம் நாட்களுக்கு நாட்கள் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தீர்வு என்று சொல்ல்லிக்கொண்டு வருகின்றார்கள். இதுவரைகாலங்களிலும் எங்களுடை தமிழ் மக்களின் தேசிய பிரச்சகைக்கு என்ன தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.குறிப்பாக கூறினால் காணி விடுவிப்பு,மீள்குடியேற்றம் அபிவிருத்திகள் அதனையும் விட ஒரு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த முடியாத நிலமை இவர்களுக்கு இப்படியான இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களினுடைய உரிமைகளை பெற்றுக்கொடுப்பது
இனிவரும் காலங்களில் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்படவேண்டும் வருகின்ற தேசிய அரசாங்கத்தில் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு அந்தஷ்துள்ள ஒரு அமைச்சரைப் பெற்று அபிவிருத்திகளை செய்ய முடியம்.குறைந்தது விவசாயம்,கல்வி,சுகாதாரம்,வீடமைப்பு இவ்வாறு பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது.படுவான்கரை பிரதேசம் படுவான்கரை பிரதேசமாகத்தான் காட்சியழிக்கின்றது.சிறு சிறு வேலைகளை செய்து விட்டு அபிவிருத்தி என்று கூறுவது எமது மக்களை ஏமாற்றுகின்ற செயல் இது.
அபிவிருத்தி என்பதற்கு இலக்கணம் தெரியாதவர்கள் என்னிடம் கேளுங்கள் அதற்கு சரியான வரைவிலக்கணத்தை கூறுகின்றேன்.கடந்த முப்பது வருடகால போராட்டத்தின் போது மரணித்த போராழிகளின் ஆத்ம சாந்திக்காக நாங்கள் இனறு வரை பிராத்திக்க வேண்டும் இதனை விட்டு விட்டு அவர்களை எல்லாம் தங்களின் அரசியல் வித்தைக்காக அரசியலில் உள்வாங்க செய்து பயன்படுத்துவது மிகவும் தவறான செயல்.இன்று பாருங்கள் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை போன்ற பிரதேசங்களில் உள்ள எத்தனையோ போராழிகளுக்கு புனர்வாழ்வு அழித்துள்ளார்கள் என்ன உதவிகளை செய்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours