மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ராணமடுவில் இருந்து பூச்சிக்கூடுக்குச் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காட்சியளிப்பதனால் பிரயாணிகள் பயணம் செய்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில் இவ் வீதியானது ராணமடுப்பாலத்தில் இருந்து 16 ஆம் கிராமம் ஊடாக பூச்சிக்கூடு,மாலையர்கட்டு, சின்னவத்தை, நெடியவட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்வதுடன் அவ்வீதியாலேயே  அப் பகுதியில் வேளன்மை செய்யும் விவசாயிகளும் அப்பகுதியில் உள்ள படசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் உட்பட பலர் பிரயாணம் செய்து வருகின்றனர். 

இந்த வீதி ராணமடுப் பாலத்தில் இருந்து அரைவாசித் தூரம் மாத்திரம் கொங்கிறீட் இடப்பட்டு இருப்பதுடன் ஏனைய சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொங்கிறிட் இடப்படாது குன்றும் குழியுமாக காட்சியளிப்பதுடன் 16 ஆம் கிராமம், மாலையர் கட்டுக் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் மூங்கிலாற்றுக்குப் பாலம் தற்போது அமைக்கப்பட்டுள்ளமையினால் பெருந்தொகையான மக்கள் இந்த வீதியின் ஊடாகவே பயணம் செய்து வருகின்றனர்.  இதனைக் கருத்தில் கொண்டு இவ் வீதியைச் செப்பநிடுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours