(எஸ்.குமணன்)
சமூக நல்லிணக்கம் பற்றி வார்த்தைகளில் பேசாமல் செயலில் காட்டுங்கள் என மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையில் 17 ஆம் மாதாந்த அமர்வு முதல்வர் சட்டத்தரணி றஹீப் தலைமையில் வியாழக்கிழமை (15.08.2019) நடைபெற்ற போது தேசிய காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
கல்முனை கடற்கரை பள்ளி வீதியானது 100% முஸ்லிம்கள் வாழுகின்ற வீதியாகும். அத்துடன் அந்த வீதி முஸ்லிம்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் இடமாகவும் இலங்கை அரசினால் முஸ்லிம்களின் தேசிய நிகழ்வாக அங்கீகாரம்பெற்ற கடற்கரை பள்ளிவாசல் அமைந்திருக்கின்ற அந்த வீதியை கடற்கரை பள்ளி வீதி என்று பெயர் சூட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பிழையானது.
அது மாத்திரமில்லாமல் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த விடயத்தை காரணமாக வைத்து அரசியல் குளிர் காய்கின்றனர்.
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் தரவை பிள்ளையார் கோவிலின் பெயரை கல்முனை பிரதான வீதியை கடந்து கடற்கரைப் பக்கமாக 100% முஸ்லிம்கள் வாழுகின்ற வீதிக்கு எவ்வாறு தரவை பிள்ளையார் வீதி என்று பெயர் சூட்டுவது? வார்த்தைகளினால் நல்லிணக்கம் பேசுகின்ற நீங்கள் இந்த விடயத்திலாவது செயலினால் செய்து காட்டுங்கள் உறுப்பினர்களைப் பார்த்து கேட்டுக்கொண்டார்.
மேற்குறித்த வீதியினை சமாதான பாதையாக மாற்றுவது குறித்து சபையில் முதல்வர் கேட்டபோது தமிழ்த்தரப்பினர் மெளனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்று கூறிய அரசியல் வாதிகள் இன்று மௌனமாக இருப்பது எதற்காக?
மேற்படி வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின் ரன் மாவத் திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு ஒரு கோடி 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு காபட் இடும் வேலைத் திட்டம் புதன்கிழமை யூலை (24) ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளரும் சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் ரஸாக் கல்முனை மாநகர சபை வேட்பாளருமான எஸ்.எல். முஹிஸின் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். நபார் உள்ளிட்டோர் இவ்வீதியின் காபட் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.இந்நிகழ்வில் திணைக்கள பொறியியலாளர்கள் ஐ.தே. கட்சி பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நாட்டில் மிக மோசமான ஒரு வீதியாக பல வருடங்களாக இந்த கல்முனை தொகுதியில் இருக்கும் நகர மண்டப வீதியின் அபிவிருத்தி திட்டத்தை பொறியலாளர்களின் சரியான திட்டமிடலுடன் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நாங்கள் இப்போது ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.கம்பரலிய திட்டத்தினை கொண்டு பல நூறு மில்லியன் ரூபாயினால் இந்த நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடைபெற்று வருகிறது. எமது தொகுதிக்கும் 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதனை திட்டமிட்டு செய்ய அந்தந்த தொகுதி எம்.பிக்கள்இ அமைப்பாளர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல எதிர்வரும் காலங்களில் நான் மக்கள் பிரதிநிதி அந்தஸ்தை பெற்றால் இன்னும் நிறைய திட்டங்கள் செய்ய முடியும் என்றார்.

கிழக்கு மாகாணத்தில் 58.09விதமாக
இருந்த தமிழர்களின் விகிதாசாரம் படிப்படியாக ஆக்கிரமிப்பாலும் நில சுரண்டல்களாலும் அரசியல் வாதிகளின் அடாவடி தனத்தாலும் 39% வீதமாக குறைக்கப்பட்டுள்ளனர். இதனை பகீரங்கமாக சமூக வலைத்தளங்களில் சில மாஜி அரசியல் தலைவர்கள் கூறியிருப்பது யாவரும் அறிந்த ஒன்று.
500 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த தரவை சித்தி விநாயகர் ஆலய வீதியை(இந்த கே. பி. எஸ்) தார்சாலையாக மாற்றியமைத்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்வது என்ன முரண்பாட்டுக்கு பலிகொள்ளும் விடயமாகவே மக்கள் கருதுகின்றனர்.
மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் சாமூவேல் ராஜன் கூறுகையில்....
எங்களுடைய மனதிற்கு வேதனை தரக்கூடிய செயற்பாடு இன்று பிற்பகல் நடைபெற்றிருக்கின்றது.கல்முனை தரவை பிள்ளையார் வீதியாக இருக்கின்ற வீதிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருக்கின்ற ரசாக் என்பவர் தன்னுடைய படத்தை பெரிதாக போட்டு கே .கே. பி வீதி என்று பெயர் வைத்திருக்கின்றார்.
இந்த வீதி கடற்கரைப்பள்ளி வீதியாக பெயர் மாற்றம் பெற்று இருப்பது வேதனைக்குரிய விடயம் ஏனெனில் ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக தரவைப் பிள்ளையார் ஆலய வீதியாக இருந்த வீதி திடீர் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.
இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் கடற்கரை பள்ளி வீதி என பெயர் பலகை இடப்பட்டபோது எங்களுடைய ஆலய பரிபாலன சபை உதவியுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு இந்த வீதி கடற்கரை பள்ளி வீதியல்ல தரவைப் பிள்ளையார் வீதி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இன முரண்பாடு தோற்றுவிக்கும் வகையில் சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் சதித்திட்டங்களுக்குள் மக்களை பகடைக்காய்க ளாக பூத்த வேண்டாம்.
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில் சுயலாபம் லாபம் தேடுகின்ற விடயமாகவே பார்க்கின்றோம்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி என்ற பெயர்களை பொருத்தப்பட்டுள்ளதாவும் இதில் தங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இலட்சினைகள் பெயரையும் பொறித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சில விஷமிகளின் நிகழ்ச்சி நிரல்கள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்துகின்றோம்.
மாநகரசபை உறுப்பினர் கே.சிவலிங்கம்
எமது மூதாதையரின் சொத்தாகவும் கல்முனை நகரில் இரண்டு கண்கள் ஒரு கண்களாக தென்படும் இந்த ஆலயம் கடற்கரை பள்ளி பெயர் சூட்டப்பட்டு இருப்பது சட்டவிரோதமான செயல்மட்டுமல்ல இரண்டு இனங்களும் ஐக்கியமான வாழ்கின் சூழ்நிலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.
உடனடியாக ரசாக் சட்டத்தரணி அவர்கள் செயற்பட்டு இந்த வீதி பதாகையை அகற்றி இன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதே எனது நோக்கமாகுமென தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஸாக் சட்டத்தரணி அவர் கருத்து தெரிவிக்கையில்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுடியாது சம்பந்தமாக நான் பிரதமரை அணுகி சமூகத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமான விடயம் எனது தலைமுறைக்கும் தொடரக்கூடாது என்பது தெளிவாக புரிந்தது பிரதமருக்கு தெரிவித்துள்ளேன் இதற்கான சமூக நீதி விரைவில் கிட்டும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளரும் சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் ரஸாக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இந்நாட்டில் மிக மோசமான ஒரு வீதியாக பல வருடங்களாக இந்த கல்முனை தொகுதியில் இருக்கும் நகர மண்டப வீதியின் அபிவிருத்தி திட்டத்தை பொறியலாளர்களின் சரியான திட்டமிடலுடன் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நாங்கள் இப்போது ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.கம்பரலிய திட்டத்தினை கொண்டு பல நூறு மில்லியன் ரூபாயினால் இந்த நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடைபெற்று வருகிறது. எமது தொகுதிக்கும் 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதனை திட்டமிட்டு செய்ய அந்தந்த தொகுதி எம்.பிக்கள்இ அமைப்பாளர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல எதிர்வரும் காலங்களில் நான் மக்கள் பிரதிநிதி அந்தஸ்தை பெற்றால் இன்னும் நிறைய திட்டங்கள் செய்ய முடியும் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours