புலம்பெயர் தமிழ்தேசிய செயற்பாட்டு அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஒற்றைமையாக எல்லா அமைப்புகளும் ஒரு தலைமைக்குகீழ் செயல்பட அங்கும் ஒற்றுமை இன்றியே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவுத்தார்.


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைதென்மேற்கு இலங்கை தமிழரசுகட்சி கிளையால் முதலைக்குடாவில் தமிழரசு கட்சி பட்டிப்பளை பிரதேச தலைவர் சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்மெற்ற தமிழரசுகட்சி விழிப்பூட்டல் கருத்தரங்கில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை அவசியம் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்சிகளாவது ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதில் எல்லோருக்கும் மனம் நிறைந்த விருப்பம் உண்டு அது கொள்கைரீதியான ஒற்றுமையாக அமையவேண்டுமே அன்றி தேர்தல்கால ஒற்றுமையாக இருக்க கூடாது.

விடுதலைப்புலிகள் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் ஒற்றுமையாக செயல்பட்ட எமது புலம்பெயர் உறவுகளும் தற்போது பல பெயர்களில் பல அமைப்புக்களாக சுமார் 22,அமைப்புகள் தமிழ்தேசிய அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் ஈழத்தில் இருக்கும் தமிழ்கட்சிகளுக்குத்தான் ஒற்றுமை இல்லை என்று பார்த்தால் அங்கும் புலம் பெயர் அமைப்புகளும் ஒரு அமைப்பு இன்னோர் அமைப்புக்கு எதிராக கருத்துக்கூறுவதும் ஒருவரை ஒருவர் பிழைகளை கூறி பிரசாரம் செய்வதையும் தற்போது காணமுடிகிறது இருந்தபோதிலும் அங்குள்ள செயல்பாடுகள் பல அமைப்புக்களும் வித்தியாசமாக இருந்தாலும் இலக்கு ஒன்றாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது.

கிழக்குமகாணத்தில் தமிழ் முதலமைச்சர் என்ற கோஷத்துடன் சில கட்சிகள் தோற்றம் பெற்று பிரதேசவாத அரசியலாகவும் இனமுரண்பாட்டு அரசியலாவும் காட்ட முற்படுவது ஆரோக்கியமாக அமையாது.

கீழக்குமகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை பெறவேண்டுமானால் எல்லா தமிழ்மக்களும் எல்லா தமிழ் கட்சிகளும் பிரதேசவாத அரசியல் செயல்பாட்டை விட்டு தமிழ்தேசியகூட்டமைப்பை பலப்படுத்தி கடந்த மாகாணசபை தேர்தலின் போது விட்டதவறை ஏற்று வாக்குகள் சிதறாமல் ஒருமித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கும் மனநிலையில் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்.

அதைவிட்டு எல்லாகட்சிகளும் ஒருகுடையின் கீழ் கொண்டுவரவேண்டுமானால் எல்லா கட்சிகளும் முதலில் கொள்கை ரீதியான உடன்பாட்டுக்கு வரவேண்டும் அதற்கு எல்லா கட்சிகளும் உடன்பட்டால் தேர்தலில் எந்தக்கட்சி எந்த சின்னம் என்பது தொடர்பாக பின்னர் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.

இதில் சிலசிக்கல்களும் உண்டு போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைகுழு வெற்றிபெற்ற உறுப்பினரை எவ்வாறு ஒரு நிலையில் வைத்திருப்பது என்ற சந்தேகம் பலமாய் உண்டு வெற்றியீட்டிய பின் அவர் சலுகைகளை பெற்று வேறொரு கட்சிக்கு சோரம் போனால் அவருக்கு எதிராக யார் எவ் வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது என்ற விடயங்களும் உண்டு.

என்னைப்பொறுத்தவரையில் இலங்கையில் உள்ள ஒன்பது மகாணசபைகளில் இரண்டு மகாணசபை மட்டுமே வடக்கு கிழக்கு நிலம் சார்ந்த சபைகளாகும் அதாவது வடக்கு மாகாணசபை மற்றது கிழக்குமாணசபை இந்த இரண்டு மகாணசபைகளிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் அப்படி போட்டி இடும்போது இரண்டு மாகாணங்களிலும் தமிழ்தேசியகூட்டமைப்பை பிரதிபலிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தான் போட்டியிடலாம் வடக்கில் வீட்டுசின்னமும் கிழக்கில் வேறொரு சின்னத்திலும் போட்டியிடும்போது அதன் பிரதிபலிப்பு அல்லது அதன் செய்தி தமிழ்தேசியகூட்டமைப்பே வடக்கு கிழக்கை பிரித்து இரண்டு மகாணங்களிலும் இரண்டு விதமான கொள்கையை கடைப்பிடிபத்துள்ளது இதனால் தாயகக்கொள்கையை கைவிட்டுவுட்டார்கள் என எமக்கு எதிரான தரப்புகள் பிரசாரம் செய்யவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்து கிழக்குமாகாணத்தில் யாரும் போட்டியிடுவதில் இவ்வாறான பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் இல்லை யாரும் விலகிச்செல்லவோ முடியாத சூழலும் ஏற்படும்.

இதனால்தான் தேர்தல் கூட்டாக இருப்பினும் அடிப்படை கொள்கையில் ஒருமித்த கருத்தொற்றுமை வேண்டும். கருத்தொற்றுமை என்பதற்கு நல்ல உதாரணம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிழக்குமாகாணத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரு வேட்பாளரை அல்லது ஒருகட்சியை ஆதரிப்பாளர்களா?

தமிழ்தேசிய கூட்டமைப்பு வாக்களிக்குமாறு கோரும் ஒரு வேட்பாளரை எல்லாக்கட்சிகளும் ஆதரிப்பாளர்களா?சற்று சிந்தியிங்கள் இப்போதே சில கட்சிகள் வேட்பாளர்களுக்கு பின்னால் புறப்பட்டு விட்டார்கள் சிலகட்சி தலைவர்கள் சில வேட்பாளர்களுடன் இரகசிய தொடர்பை ஏற்படுத்தி உங்களுக்கே எமது ஆதரவு என தெரிவித்துவிட்டார்கள் இந்த நிலையில் கிழக்குமாகாணசபை தேர்தலுக்கு மட்டும் ஒற்றுமை சாத்தியமான ஒன்றாக அமையுமா சிந்தியுங்கள் இது எனது கருத்து மட்டுமே கட்சியின் கருத்தல்ல கட்சி எடுக்கும் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவதே கட்சி உறுப்பினர்களின் கடமை கட்சியின் முடிவு எப்படி என்பதை எதிர்காலத்தில் பார்ப்போம்.

இப்படித்தான் கடந்த 2013,வடக்கு மகாணசபை தேர்தலில் கொழும்பில் செயல்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் விக்கினேஷ்வரன் ஐயாவை வடமாகாண முதலமைச்சராக களம் இறக்க முற்பட்டபோது நான் மட்டுமே துணிந்து கூறியிருந்தேன் நீதியரசர் நீதிநியாயம் அறிவு ஆற்றல் எல்லாம் உள்ள நல்ல மனிதர் ஆனால் வடமாகாணசபை முதலமைச்சருக்கு மட்டும் அவர் தகுதியற்றவர் வடக்கு மக்களின் வேதனை துன்பம் துயரம் நிலம் என்பவற்றை அறியாதவர் அதில் பங்கு எடுக்காதவர் முள்ளிவாய்க்கால் அவலத்தை அதன் தாக்கத்தை அறிந்திருக்காதவர் அவரை விட்டு மாவை சேனாதிராசா அண்ணர்தான் மிகப்பொருத்தமானவர் என்று கூறினேன் எனது அறிக்கையை ஊடகங்களிலும் வெளிப்படுத்தி இருந்தேன்.

இவ்வாறான எனது கருத்து எமது பாராளுமன்ற குழுவில் சம்மந்தன் ஐயா சுமந்திரன் உட்பட பலரும் என்னைப்பார்த்து்நேரடியாக ஒரு நீதியரசரை அவ்வாறு நீர் ஊடகத்தில் கூறி இருப்பது பிழை அறிவு ஜீவியான விக்கினேஷ்வரன் ஐயா அவர்தான் இன்றய சர்வதேச இராஜதந்திர அரசியலுக்கு மிகப்பொருத்மானவர் அப்படியான ஒரு கல்விமானை தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக கிடைத்து தமிழ் மக்கள் செய்த பாக்கியம் என்று எமது கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் எல்லாம் என்மீது விரல் நீட்டி விமர்சித்தார்கள்.

ஆனால் என்ன நடந்தது விக்கினேஷ்வரன் ஐயா தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து தடம்மாறிவிட்டார் இன்று நான் சொன்னது சரிதான் என்று எமது கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

வடமாகாணத்தையும் அரசியலையும் காட்டிய தமிழ்தேசியகூட்டமைப்புக்கு இன்று விக்கினேஷ்வரன் ஐயா தண்ணீர் காட்டிவிட்டார் அல்வா இதுதான் நிலை சிலர் தம்மை பிரபல்யப்படுத்தவே தமிழ்தேசியத்துக்குள் நுழைந்து வெற்றியீட்டிய பின் தடம்மாறுகிறார்கள் இந்த முஷ்லிம் அரசியல் தலைவர்களுக்குத்தான் கடந்த காலம் இருந்தது இப்போது தமிழர்களுக்கும் உள்ளது

பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த காலம் செய்த சரிகளையும் செயல்களையும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யுங்கள் அதுதான் ஆரோக்கியமான விமர்சனம் எனவும் மேலும் கூறினார்.      
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours