மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள சிக்கலினை தீர்க்கும் வகையிலான உயர் மட்டக்கலந்துரையாடல் 15.08.2019 ஆந் திகதி மாலை 3.00 மணியளவில்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர்  மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி.டாக்டர்.கலாராணி,வைத்திய அதிகாரிகள்,செங்கலடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்,செங்கலடி பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச  சபை தவிசாளர்,செஙகலடி பிரதேச பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்கள்,கரடியநாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,மாவட்ட செயலக சுற்றுக்சுழல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான் பகுதியில் சுற்றாடல் அதிகார சபை உட்பட அனைத்து திணைக்களங்களின் அனுமதியுடன் உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவகளை புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக புதைக்கும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்து.

அதனைத் தொடர்ந்து கழிவுகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மட்டக்களப்புக்கு திரும்பிய நிலையில் அவற்றினை மீண்டும் திராய்மடுவில் களஞ்சியப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையும் பிரதேச மக்களால்  எதிர்க்கப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கழிவுகள் நீதிமன்ற  நீதிபதியின் தீர்வின் பின்னர் புதைக்கப்படவுள்ளதாகவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours