நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் சுற்றுலாத்துறையில் நிலையான வேலை
வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மற்றும் வியாபார விருத்திக்கான
ஒருங்;கினைந்த திட்டங்களுக்கு உதவும் வகையில் கிழக்கும் மற்றும்
வடமத்திய மாகாணங்களின் சுற்றுலாத்துறை சார்ந்த விசேட திட்டங்களை
அமுல்படுத்த அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் திறன்விருத்தி
மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த விசேட திட்டத்திற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள 401சுற்றுலா விடுதிகளில் கடமை புரியும் பணியாளர்களுக்குசுற்றுலாதுறை தொடர்பான ஆரம்பகட்ட விசேட பயிற்சிநெறிஉள்;நாடு மற்றும் சர்வதேச நாடுகளின் பயிற்றுனரால் விசேட பயிற்ச்சிநெறிகள் சுமார் 5நாட்களுக்கு வழங்கிவைக்கும் திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு விவசாய மற்றும் கைத்தொழில் வர்த்தக சம நலத்தின்
மேற்பார்வையில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட இந்த விடே
பயிற்ச்சிநெறியை பூர்த்தி செய்த 83 பணியாளர்களுக்கு
திறமைச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ரீட்டோ தனியார்
விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு விவசாய கைத்தொழில் வர்த்தக தேசிய சம்மேளனத்தில் தலைவர் எம்.எச எம் நளீம் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம
அதிதியாக கலந்து கொண்டு குறித்த பயிற்ச்சிகளை பூர்த்தி செய்த
சுற்றுலூமையங்களில் பணியாளருக்கு திறமைசான்றிதழ்களை வழங்கி
வைத்தார்.



இந்த நிகழ்வில் வர்த்தக தேசிய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்
அஜித் டி.பெரேராரூபவ் அவுஸ்திரேலியா நாட்டு பிரதிநிதி டேவிட்
அப்லட் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் சிறப்பு அதிதியாக
கலந்துகொண்டார்.

இந்த பயிற்ச்சியில் விடுதி பராமரிப்பாளர்கள் ரூபவ் உபசரிப்பாளர்கள் ரூபவ் அனுசரனையாளர்கள் ரூபவ் முகாமையாளர் உட்பட பல
துறைகளில் சர்வதேச சுற்றுலாத்துறை தொடர்பான அனுபவமுள்ள
பயிற்றுவிப்பளர்களால் பயிற்;சிகள் வழங்கப்பட்டன.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours