அரச அரசசார்பற்ற நிறுவனமாக இருந்தாலும் பிரதேசசெயலகத்திற்குத் தெரியப்படுத்தாமல் எந்த வித உதவிகளையும் செய்யமுடியாது ஏன் என்றால் நீங்கள் அவ்வாறான உதவிகளைச் செய்யும் போது பிரச்சினைகள் வரும் பட்சத்தில் எங்களால் அதற்கான தீர்வினை வழங்கமுடியாது எனப்பிரதேசசெயலாளர் ராகுலநாயகி தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்கின்ற பொது அமைப்புக்களின் மாதாந்த ஒன்றுகூடலும் அவ்வமைப்புக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வும் பிரதேசசெயலக மண்டபத்தில் திங்கட்கிழமை காலை நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக் கூட்டம் தொடர்பாக பல அமைப்புகளுக்கு பிரதேசசெயலாளர் அழைப்புக் கொடுத்திருந்தனர் இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சமூகசேவைகளைச் செய்து கொண்டிருக்கும் சுவிஸ் உதயம் அமைப்பின் சார்பாக அவ் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் மகளீர் அமைப்புத்தலைவியும் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் பிரதிச் செயலாளர் திருமதி மனோகரன் செல்வி கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட பல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எமது அமைப்பின் சேவைகளை இனங்கண்டு இந்நிகழ்வுக்கு எம்மையும் அழைத்து கருத்துத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதேசசெயலாளருக்கு அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் நன்றிதெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours