கடந்த முப்பதுவருடங்களாக பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தினை கட்டியெழுப்பும் நோக்குடனே சுவிஸ் உதயம் அமைப்பு செயற்பட்டுவருகிறதே தவிர எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் அல்ல என உதயத்தின் கிழக்குமாகாணக் கிளைத் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தெரிவித்தார்.
சுவிஸ் உதயத்தின் விஷேட நிருவாகசபைக் கூட்டம் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத்தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பாசிக்குடா சன்றே விடுதியில் 10 ஆம்திகதி சனிக்கிழமை காலை இடம்பெற்றபோது தலைமையுரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் கல்குடா கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி,அமைப்பின் உபசெயலாளர் செல்வி ,கிழக்குமாகாணக்கிளையின் பிரதித் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன், அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் செயலாளர் குலேந்திரன் ,கணக்குப்பரிசோதகர் எஸ். நகேந்திரன் உட்பட மட்டக்களப்பு,அம்பாரை,திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் பேசுகையில் சுவிஸ் உதயம் அமைப்பு சுவிஸ் நாட்டில் கிழக்குமாகாண மக்குளுக்கு உதவும் நல்லநோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு கல்வி,பொருளாதாரம்,வாழ்வாதரம் போன்ற உதவிகளை பாதிக்கப்பட்டமக்களுக்குச் செய்துகொண்டு வருகின்றது குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட யுத்தசூழ்நிலையினால் தமிழ்ச்சமூகம் அனைத்தையும் இழந்து பலவழிகளாலும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் அவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்துகொண்டுவருகின்றோம்.
கல்வி என்பது ஒரு இனத்தின் இருப்பைப் பாதுகாப்பது இதற்காக எங்கள் அமைப்பின் கவனம் கூடுதலாக கல்விக்குத் திரும்பியுள்ளது அதாவது பல்பலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு அவர்களது கல்வி நடவடிக்கை முடியும் வரை நாம் உதவிக்கொண்டுவருகின்றோம் இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முப்பது இலட்சத்துக்கு மேலான நிதி செலவுசெய்யப்படுகிறது. இதன் நோக்கம் பாதிக்கப்பட்டு இருக்கும் எமது சமூகத்தினை கல்வியில் முன்நேற்றவேண்டும் என்பதற்காகவே நாம் செய்து வருகின்றோம் இவ்வாறு அனைவரும் முன்வந்து சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டிய தேவை இருக்கின்றது என்றார்
Post A Comment:
0 comments so far,add yours