விண்வெளியில் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகில் அடையலாம் தெரியாத ஏலியன் விண்கலம் பறந்து செல்வது ISS நேரலை வீடியோ பதிவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது. 

இரண்டு கால்கள் கொண்ட உருவம் போல இருக்கும் அடையாளம் தெரியாத பறக்கும் விண்கலம் ISS நிலையம் அருகே நோட்டம் விட்டு சென்றுள்ளதாக, ஸ்பேஸ் ஸ்டேஷனில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.Conspiracist Of Sound Mind and Body என்ற யூடியூப் சேனல் இந்த வீடியோவை தற்பொழுது போஸ்ட் செய்துள்ளது.


மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரல் 
உண்மையில் இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு, இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் நேரலை வீடியோ எடுக்கும்பொழுது பதிவாகியுள்ளது. நேரலை வீடியோ பதிவாகிய நேரத்தில் இந்த பறக்கும் விண்கலம் வீடியோவில் சிக்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.


கூடுதல் அதிர்ச்சி தகவல் 
இதில் கூடுதல் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், வீடியோவில் விண்கலத்தைப் பதிவு செய்த நேரத்தில், சிறிது நேரம் நேரலை உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று ஸ்பேஸ் ஸ்டேஷன் வீரர்களும் தெரிவித்துள்ளனர்.


ஏலியன் விவாதத்தை உருவாக்கிய வீடியோ 
இந்த வீடியோவை பார்த்த சிலர், இது ஸ்பேஸ் ஸ்டேஷன் கண்ணாடியின் பிரதிபலிப்பு என்றும் கூறியுள்ளனர்.தேவை இல்லாத புரளியைக் கிளப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏலியன் ஆய்வாளர்கள் பலரும் இதைப் பறக்கும் ஏலியன் விண்கலம் தான் என்று தெரிவித்துள்ளனர்.


ஐ.எஸ்.எஸ் நிலையத்தை அடிக்கடி நோட்டமிடும் ஏலியன் 
இன்னும் சிலர், மனித இனத்தைவிடப் புத்திசாலித்தனமான வேற்று இனம் ஒன்று விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ் நிலையத்தை அடிக்கடி நோட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் அடையாளம் தெரியாத உருவம் இப்படித் தோன்றுவது இதுவே முதல் முறை இல்லை.


Area 51 பின்னால் உள்ள உண்மை
ஏலியன் நடமாட்டம் பற்றிய பதிவுகள் வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு தான் வருகிறது. அதில் சில சம்பவங்களை நாம் பார்த்தாலே நம்பிவிடலாம். இருப்பினும் இன்னும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. area 51 பின்னால் உள்ள உண்மைகள் வெளியில் வந்தால் ஏலியன் பற்றிய தகவல்களுக்கு நிச்சயம் விடை கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share To:

Swiss uthayam News

Post A Comment:

0 comments so far,add yours