எப்போதும் ஒரே மாதிரி தோசை சுட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக கடைகளில் விற்கப்படும் வெங்காய பொடி தோசையை செய்து சுவையுங்கள். குறிப்பாக இந்த தோசையை சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம். இங்கு அந்த வெங்காய பொடி தோசையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவையான அளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.
பின்னர் அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், வெங்காய பொடி தோசை ரெடி!!!
Post A Comment:
0 comments so far,add yours