ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் உதவி செயலாளர் டினுசா சிறிவீரவினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயற்திட்ட அறிக்கையினை தயாரிக்கும் கூட்டம் நேற்று (15) இன்றும்(16) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது.
இக்கூட்டத்தின் விசேட வேலைத்திட்டமாக போசாக்கு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது.இலங்கையில் மொத்தம் எட்டு மாவட்டங்கள் போசாக்கு இன்மை தொடர்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறு மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு திட்ட முன்மொழிவும் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது மட்டக்களப்பு ஆறாவது மாவட்டமாக தெரிவாகி இன்றும் நாளையும் இதற்கான திட்ட முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தது.
மாவட்டத்தின் சுகாதார போசாக்கு தொடர்பான வைத்திய அதிகாரிகள்,மற்றும்,பிரதேச செயலாளர்கள், சுகாதார பரிசோதகர்கள்,திணைக்கள தலைவர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours