(டினேஸ்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் கிளைகளின் உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும்> யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ்த் தேசியக்>கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்> ஞா.ஸ்ரீநேசன் >முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொ.கனகசபை>பொன்.செல்வராசா> பா.அரியநேத்திரன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்> உபதலைவர்கள்> உறுப்பினர்கள்> கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள்> வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கட்சியின் செயற்பாடுகள்> தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்> கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள்> மாவட்டத்தின் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பாரபட்சம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours