(சதீஸ்)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனை தென்மேற்குப் பிரதேசக் கிளைக் கூட்டம் இன்றைய தினம் அப்பிரதேசக் கிளையின் தலைவரும், மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளருமான எஸ்.புஸ்பலிங்கம் தலைமையில் முதலைக்குடாவில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்புத் தொகுதிக் கிளைத் தலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர் உட்பட நிருவாகிகள், வட்டாரக் கிளைகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேசக் கிளையில் உள்ளடங்கும் வட்டார ரீதியாக அமைக்கப்பட்ட கிளைகளின் உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், பிரதேச ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் மற்றும் கட்சித் தலைமைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பன பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours