பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்குப் பாராட்டு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025
கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
நாளை அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்
ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா தகுதிபெற்றுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் அன்னா பிளின்கோவாவை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் நிக்கொல் கிப்ஸை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சக செக் குடியரசு வீராங்கனை டெனிஸா அல்லெர்ட்டோவாவை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெற்றா குவிற்றோவா, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டில் ஸ்பெய்னின் போலா படோஸாவை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீவன்ஸ், 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
Post A Comment:
0 comments so far,add yours