(த.தவக்குமார்)
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்ட அம்பிளாந்துறை வீரமுனை வீதியில் உள்ள கறுப்புப்பாலத்தின் திருத்த வேலைகள் வழங்கப்பட்ட ஓப்பந்தக் காலங்களையும் கடந்தும் நிறைவுறாமல் காணப்படுவதாக இவ்விதியூடாக பயணிக்கும் பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பாலத்தின் புனரமைப்பு வேலைகள் தாமதமாக நடைபெற்றுவருவதாகவும் இதனால் இவ்விதியூடாக பயணிக்கும் பிரதேசவாசிகள் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இரவு நேரங்களில் பாரிய விபத்துக்கள் ஏற்படவாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தையும் இணைக்கின்ற வீதி இது.இந்த வீதியினூடாக அதிகமான கனகரக வாகனங்கள் பொதுமக்கள் எனப் பலரும் பயணங்களை மேற்கொள்வது வழக்கம்.எனவே உரிய அதிகாரிகள் இந்த பாலத்தின் வேலைகளை ஒப்பந்தக்காரர்களை விரைவில் துரிதப்படுத்தி வேலைகளை நிறைவுறுவதற்கு பணிப்புரை வழங்க வேண்டும் என இப்பிரதேசத்தின் உள்ள சமுகமட்ட அமைப்புக்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours