நட்சத்திர மண்டலத்தில் 900 ஒளி ஆண்டுகள் தொலைவில், தோராயமாக வியாழன் கிரகத்தின் அளவிலான கிரகம் ஒன்று, அதன் அருகிலுள்ள புரவல நட்சத்திரத்தின் புவியீர்ப்புவிசை காரணமாக வடிவத்தை மாற்றுவதால் வளிமண்டலத்தில் கனமான உலோக வாயுக்களை வெளியிட்டு வருகிறது.
கனரக உலோக வாயுக்களை வெளியிடாது
பொதுவாக இந்த அளவிலான கிரகங்கள் தேவையான அளவிற்கு குளிர்ச்சியாக இருப்பதால் கனரக உலோக வாயுக்களை வெளியிடாது என அறியப்பட்ட நிலையில், WASP-121b என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் அதன் நட்சத்திரத்திற்கு 'ஆபத்தான அளவில் நெருக்கமாக' இருப்பதால், வாயுக்கள் வெளியேறும் அளவிற்கு வெப்பமாக உள்ளது.
மெக்னீசியம் மற்றும் அயர்ன் வாயுக்கள்
"முன்னதாக கனரக உலோகங்கள் மற்ற வெப்ப வியாழன்களில் மட்டுமே காணப்பட்டன. ஆனால் அதுவும் கீழ் வளிமண்டலத்தில் மட்டுமே இருந்தன. எனவே அந்த வாயுக்கள் தப்பி செல்கின்றனவா இல்லையா என்பது தெரியாது. WASP-121B கிரகத்தை பொறுத்தமட்டில், மெக்னீசியம் மற்றும் அயர்ன் வாயுக்கள் கிரகத்திலிருந்து வெளியேறுவதை நம்மால் பார்க்க முடிவதால், அவை ஈர்ப்பு விசையுடன் பிணையவில்லை '" என்கிறார் பேல்டிமோர் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைகழகத்தின் டேவிட் சிங்.
ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி
ஆஸ்ட்ரோனோமிகல் ஜேர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஆய்வாளர்கள் ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு முடிவுகளை பகுப்பாய்வு செய்து, அக்கிரகத்தின் நெருக்கமான புரவல நட்சத்திரத்தில் இருந்து வரும புற ஊதா ஒளி, மெக்னீசியம் மற்றும் இரும்பு வாயுக்கள் மேல் வளிமண்டலத்திற்கு செல்ல உதவுகிறது என கண்றிந்துள்ளனர். இதன் விளைவாக அங்கு சூழ்நிலை மேலும் வெப்பமாக மாறலாம். 'இந்த உலோகங்கள் புற ஊதாக்கதிர்களால் வளிமண்டலத்தை மேலும் அதிகமாக ஒளிபுகாதவாறு செய்யும். இது மேல் வளிமண்டலத்தினை வெப்பப்படுத்துதலில் பங்களிப்பதாக இருக்கும்' என்று சிங் கூறியுள்ளார்.
கால்பந்து போல இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்
WASP-121b என்பது வெளியாகும் உலோகங்களுக்கு மட்டுமல்லாமல், அதன் வடிவத்திற்கும் கூட தனித்துவமானது. புரவல நட்சத்திரத்திற்கு இந்த கிரகம் அருகாமையில் இருப்பதால், அதன் வடிவம் கால்பந்து போல இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது
இது தொடர்பாக நாசா கூறுகையில், இந்த கிரகம் மிகவும் நெருக்கமாக அமைந்திருப்பதால் ஈர்ப்பு சக்திகளால் ‘பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது' என தெரிவித்துள்ளது. இந்த கிரகம் மிகவும் தீவிரமானது என்பதால் நாங்கள் அதைத் தேர்ந்தெடுத்தோம். கனமான கூறுகள் தப்பிப்பதைக் காண எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நினைத்தோம். என்கிறார் சிங்.
வளிமண்டலம்
மேல் வளிமண்டலம் 4,600 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையை அடையும் என இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
Post A Comment:
0 comments so far,add yours