ஹூவாய் சாதனங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தக் கூடாது என்கிற அமெரிக்காவின் தடையை தொடர்ந்து, ஹூவாய் நிறுவனம் தனது சொந்த இயங்குதளமான Harmony Os-ஐ நேற்று அறிமுக செய்தது.
ஹார்மனி இயங்குதளம் : குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் ஐழவு சாதனங்களில் இயங்கும் வகையில் புதிய ஹார்மனி இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த காலத்திற்கு தகுந்தபடி அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக நான்கு முக்கிய பில்டிங் பிளாக்களை நினைவில் கொண்டு மைக்ரொகெர்னல் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது என ஹூவாய் நிறுவன powered by Rubicon Project தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு
ஸ்மார்ட் ஸ்கிரீன்கள் : ஹூவாய் அறிமுகம் செய்த ஹார்மனி இயங்குதளத்தை முதலில் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஸ்மார்ட் ஸ்கிரீன்கள், இன்-வெயிக்கில் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும்" என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்மனி ஒஎஸ் மைக்ரோகெர்னல் : ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும்போது ஹார்மனி ஒஎஸ் மைக்ரோகெர்னல் சாதனத்தின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, பின்பு ஹார்னமி ஒஎஸ் பயனர்களுக்கு நான்கு மிக முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை வழங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒபன்-சோர்ஸ் கம்யூனிட்டி : குறிப்பாக ஹூவாய் தனது ஹார்மனி ஒஎஸ் தளத்தை உலகம் முழுக்க ஓபன்-சோர்ஸ் பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிட்டுள்ளது, மேலும் டெவலப்பர்களுடன் நுணுக்கமாக இணைந்து செயல்படும் வகையில் ஓபன்-சோர்ஸ் பவுன்டேஷன் மற்றும் ஒபன்-சோர்ஸ் கம்யூனிட்டி முறையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன அம்சங்களை வழங்கும் : ஹூவாய் அறிமுகம் செய்த ஹார்மனி இயங்குதளம் கண்டிப்பாக சக்திவாய்ந்த அதிநவீன அம்சங்களை வழங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது இந்த புதுய ஒஎஸ்.
Post A Comment:
0 comments so far,add yours