இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
முதலாவது போட்டியில் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து பீனிக்ஸ் பறவை போல தமது முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தால், சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன், வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸின் பங்களிப்புகளுடன் வென்ற அவுஸ்திரேலியா இப்போட்டியில் உத்வேகத்துடன் நிச்சயமாகக் களமிறங்கும்.
மறுபக்கமாக, முதலாவது போட்டியில் தோற்றதோடு, தமது சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனை இழந்தபோதும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் அறிமுகத்தை மய்யமாக வைத்து இப்போட்டியில் களமிறங்கப் போகின்றது
Post A Comment:
0 comments so far,add yours