(த.தவக்குமார்)
போரதீவுப்பற்று பிரதேச செயயலகத்திற்குற்பட்ட நீர்ப்பாசண திணைக்களத்திற்குரிய தம்பலவத்தை ஊற்றுக்கேணி வீதி மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின் போது இந்த வீதியில் நீர் வடிந்தோடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த நீர்க்குளாய் வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அப்பிரதேசத்திலுள்ள மக்கள் இந்த வீதியினூடாக பகல் இரவுவேளைகளில் போக்குவரத்தில் ஈடுபடுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். காரணம் இந்த வீதியின் குறுக்காக பாரிய குழிகள் இருப்பதே காரணம்.

இவ்விடயம் பற்றி இப்பிரதேச மக்கள் கிராம அபிவிருத்திச் சங்கம்,விளையாட்டுகழகம் போன்ற அமைப்புக்களுடாக நீர்ப்பாசணத்திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிற்கப்பட்டும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களிலாவது இவ்விதியை திருத்தியமைப்பதற்கு உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா





Share To:

Post A Comment:

0 comments so far,add yours