உடல் எடையை குறைக்க வேண்டுமென்று அனைவருக்குமே ஆசையிருக்கும். அதற்காக பல்வேறு முயற்சிகளில் தினமும் ஈடுபடுகிறோம். உடல் எடையை குறைப்பதற்கு முதலில் தேவை ஆரோக்கியமான உணவு முறையாகும். உடல் எடையை குறைக்க இப்போது அதிக பிரபலமாகி வரும் ஒரு முறை பச்சை காய்கறிகள் ஜூஸாகும்.
பச்சை காய்கறிகளின் ஜூஸ் குடிப்பது இன்று உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எடை குறைப்பு முறையாக இருக்கிறது. இந்த வகை ஜூஸ்களை உங்கள் உணவில் சேர்ப்பது உங்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதோடு தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகிறது. இந்த பதிவில் காலே ஜூஸ் உங்கள் எடையை குறைக்க எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.
திரவ உணவு டயட் : திரவ உணவு டயட் என்பது மிகவும் குழப்பமானதாக இருக்கலாம். நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலை திரவ உணவுகளை மட்டுமே நம்பி இருப்பது கடினமானதாகும். எனவே அதற்கான சரியான மூலப்பொருளை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். உங்களுக்கான ஆற்றல் பானத்தை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தவறான தேர்வு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகமாக்கும்.
காலே ஜூஸ் : சில குறிப்பிட்ட பச்சை காய்கறிகளின் ஜூஸ்கள் உங்கள் உடலில் இருக்கும் அதிகமான கலோரிகளை குறைக்க பயன்படுகிறது. இதில் முக்கியமானது காலே என்னும் பச்சை காய்கறியாகும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், போன்றவை உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இது எடைகுறைப்பிற்கு மட்டுமின்றி உங்கள் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் வெளியேற்றுகிறது. இந்த எளிய ஜூஸை காலை உணவிற்கு பிறகோ அல்லது உடற்பயிற்சிக்கு பிறகோ குடித்தால் அதிக பயன்களை அனுபவிக்கலாம். காலே ஜூஸ் எப்படி எடையை குறைக்க எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.
கலோரிகள் குறைவு : காலே ஊட்டச்சத்து மிகவும் அதிகமாக இருக்கும் காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது, மேலும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட்களும், வைட்டமின்களும், பீட்டா கரோட்டின்களும் அதிகமுள்ளது.
வைட்டமின் சி மற்றும் கே : தினமும் ஒரு கிளாஸ் காலே ஜூஸ் குடிப்பது உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதை விட அதிக வைட்டமின் சி-யை கொடுக்கிறது. வைட்டமின் சி மற்றும் கே அதிகமிருப்பதால் இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க பயன்படுகிறது. இது உங்கள் உடலில் இருக்கும் கால்சியத்தின் அளவையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
எடை குறைப்பிற்கான நார்ச்சத்துக்கள் : காலேவில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது இது உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. எடைகுறைப்பிற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்கள் வயிறை தூய்மையாக வைத்திருக்கவும், செரிமான பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இது உங்களின் பசியை கட்டுப்படுத்துகிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது : காலே ஜூஸ் நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுவதுடன் எவ்வளவு சோர்வான நாளையும் புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. இதில் அதிகமிருக்கும் புரோட்டின் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களான மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்துடன் நேரடி தொடர்புடையது. நீங்கள் விரைவாக எடையை குறைக்க விரும்பினால் அதற்கு மிகச்சிறந்த தேர்வு இதுதான்.
Post A Comment:
0 comments so far,add yours