நமக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் இப்பொழுது ஸ்மார்ட்போனில் கூகுள் செய்தோ, அல்லது வேறு ஏதேனும் வலைத்தளத்திற்குச் சென்றோ தான் தெரிந்துகொள்கிறோம். இணையதளத்தில் எந்த வலைத்தளத்தை ஓபன் செய்தலும் முழுமையாக விளம்பரங்கள் தான் முதலில் வருகிறது.
எரிச்சல் தரும் விளம்பரங்கள்
இந்த விளம்பரங்கள் நம்மைப் பல முறை எரிச்சல் அடையச் செய்திருக்கும். அப்படியான விளம்பரங்கள் உங்கள் பிரௌசரில் தோன்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
உங்கள் கூகுள் கிராமில் விளம்பரங்களைத் தடை செய்வது எப்படி?
நீங்கள் பிரௌஸிங் செய்வதற்குக் கூகுள் கிராம் செயலியைப் பயன்படுத்தினால், கண்டிப்பாக வீடியோ அல்லது செய்திகள் படிக்கும் பொழுது விளம்பரங்கள் தோன்றும். இந்த செயல்முறைகளைப் பின்பற்றி உங்கள் ஸ்மார்ட்போனில் தோன்றும் விளம்பரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்.
விளம்பரங்களை தடுப்பதற்கான செயல் முறை
- உங்களுடைய கிரோம் பிரௌசர் ஓபன் செய்து செய்துகொள்ளுங்கள்.
- அடுத்தபடியாக செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள். சைட் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
- பாப் அப்ஸ் கிளிக் செய்து டோகில் சுவிட்ச் கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் கிரோம் பிரௌசரில் வரும் அனைத்து விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுவிடும்.
ஆட் பிளாக்கர் செயலி பிரௌசர் விளம்பரங்களை தடுப்பதற்கு மூன்றாம் நபர் செயலியை நாம் பயன்படுத்தலாம். பாதுகாப்பான செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். AdBlock Plus என்ற இந்த செயலி நம்பிக்கையான செயலியாகும். ஆட் பிளாக்கர் செயலியைப் பயன்படுத்தி எப்படி விளம்பரங்களை பிளாக் செய்வது என்று பார்க்கலாம்.
ஆட் பிளாக்கர் செயலியில் விளம்பரங்களை தடுக்கும் முறை
- AdBlock Plus செயலியை முதலில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
- File Manager ஓபன் செய்து AdBlock Plus APK ஃபைலை தேடுங்கள்.
- AdBlock Plus APK கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- AdBlock Plus செயலியை ஓபன் செய்து ஓகே கிளிக் செய்யுங்கள்.
AdBlock Plus செயல்முறை
- உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ் மெனு செல்லுங்கள்.
- Unknown sources ஆப்ஷனை கிளிக் செய்து செக் பாக்ஸ் கிளிக் செய்யுங்கள்.
- பாப் அப்களை தடை செய்ய ஓகே கிளிக் செய்து தடை செய்யுங்கள்.
- இம்முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்போனில் தோன்றும் தேவையில்லாத விளம்பரங்களைத் தடை செய்துகொள்ளலாம்.
Post A Comment:
0 comments so far,add yours