கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி நாம் இருக்கும் இடம் எது, எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை முப்பரிமாணத்தில் வழியைக் காட்டும் தொழில்நுட்ப அம்சத்தை கூகுள் நிறுவனம் அதன் கூகுள் மேப்பில் புதிய அப்டேட் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
நீல நிறத்தில் சாலை வழி பாதையை காட்டும் : கூகுள் மேப் மூலம் நீங்கள் தேர்வு செய்து ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், நீல நிறத்தில் சாலை வழி பாதையை காட்டும், பின்பு நடந்து செல்பவர்களுக்கு தகுந்தபடி சந்து பொந்து வழிபாதைகளையும் காட்டும் வசதியுடன் கூகுள் மேப்ஸ் களமிறங்கும்.
ஆக்மென்டட் ரியாலிட்டி : குறிப்பாக நமக்கு எதிரே போனில் உள்ளவற்றை போனில் பார்த்தவாறே கூகுள் மேப்பில் வழிகாட்டப்படும், இதற்கு தகுந்தபடி ஆக்மென்டட் ரியாலிட்டி என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்புக்குறி குறிப்பிட்ட திசையில் மாறும் : எளிமையாக சொல்லவேண்டும் என்றால் கூகுள் மேப்ஸ் அனைத்து திசையும் அதிநவீன அனிமேஷனில் காட்டப்படும், அதன்படி நேராக செல்ல வேண்டும் என்றால்,மேல்நோக்கிய அம்புகுறி தெரியும். பின்பு வலது புறம் திரும்ப வேண்டும் என்றால் அந்த அம்புக்குறி குறிப்பிட்ட திசையில் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் : மேலும் நீங்கள் வந்துசேரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டால் சிவப்ப குறியில் அம்புகுறியில் அந்த இடம் ஹைலைட் செய்யப்படும். குறிப்பா இந்த வசதி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours