த.தவக்குமார்
இந்தப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கிழக்கு மாகாணத்திலே எங்களது தமிழ் மக்களுக்கு பாரிய பிரச்சனைகள் இருக்கின்றன அண்மையில் பார்த்திருப்பீர்கள்இஅறிந்திருப்பீர்கள் ஒரு பிரதேச செயலகத்தினை பெறுவதற்காக முப்பது வருடங்களாக நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம்.அதுவே கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரச்சனை எத்தனையோ அரசியல் வாதிகளிடம் இப்பிரதேச மக்கள்இஅமைப்புக்கள் சென்றன ஆனால் இதுவரைக்கும் நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. என ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள நான்கு குளங்கள் 12 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்றும் எங்களது தமிழ் மக்களுடைய நிலை அவலமான நிலையிலேயே காணப்படுகின்றது.எங்களுடைய ஜதார்த்தபூர்வமான உன்மைகளை நாங்கள் மறைத்து விடக்கூடாது.நாங்கள் அனைத்தையும் மறைத்துக்கொண்டு வருவதாலேயே நீண்டகாலமாக பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தேர்தல்காலம் வந்தால் எங்களுக்கு ஒரு களியாட்டம் பல கட்சிகள் வந்து பல பொய்யான வாக்குறுதிகளை கூறி எங்களை ஏமாற்றி பெறுமதியான வாக்குக்களை பிரிக்கச்செய்கின்றார்கள். இதனால் அரசாங்கத்திலே பலம்வாய்ந்த ஒரு அமைச்சரை பெறமுடியாத நிலமை ஏற்படுகின்றது இதனால் எங்கள் பிரதேசங்களை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லை இவ்விடயத்தினை நாங்கள் அனைவரும் சற்று சிந்திக்கவேண்டும் என்பதே எனது அவா
இந்த நாட்டிலே வாழ்கின்ற எங்களுடைய மக்கள் அனைவரும் நாங்களே ஆளக்கூடிய ஒரு சூழ்நிலையினை உருவாக்க வேண்டும் இன்று பாருங்கள் எங்களது பட்டிருப்பு தொகுதி கடந்த காலங்களாக எவ்விதமான அபிவிருத்திகளையும் இல்லாமல் இருந்து வந்தது. நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட இல்லாமல் இருந்தும் பல கோடி ரூபா நிதிகளை கொண்டு வந்து இன்று பாரிய அபிவிருத்தியினை நோக்கி பட்டிருப்பு தொகுதி சென்று கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை பற்றி நான் கூறத்தேவையில்லை பல இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டார்கள் அதுமட்டுமல்லாமல் பல தொழிலதிபர்கள் மற்றும் உண்மையினை எழுதிய பல ஊடகவியலாளர்கள் கடத்தப்ட்டு கொலைசெய்யப்பட்டார்கள் அதன் பின்னர்தான் அந்தக் கொடூரமான அரசாங்கத்தை எங்களது மக்கள் தூக்கி எறிந்தார்கள்.இன்று பாருங்கள் இந்த இடத்திலே நான் வந்து உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது என்றால் அதற்கு காரணம் எங்கள்து மக்களின் ஆதரவே கடந்த காலங்களில் குறிப்பாக போரதீவுப்பற்று பிரதேசங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது வீதிகளால் யாரும் பயணிக்க முடியாத நிலை இருட்டடைந்த வீடுகள் அயலவர்கள் வீட்டுக்கு யாரும் சென்று வரமுடியாத நிலமை இதற்கெல்லாம் காரணம் முப்பது வருடங்களாக நடந்த கொடிய யுத்தமே.
ஆனால் அந்த நிலமை தற்போது மாறி இந்தப்பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றது எமது மக்கள் ஓரளவு திருப்தியடைந்து வருகின்றனர். அதுவே எமக்கு தேவை இன்று என்னைப் போன்ற அரசியல் வாதிகள் இருகிகும் வரை எமது மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் இயன்றவரை உதவிகளை செய்வதே எனது நோக்கம் மற்றவர்களைப்போன்று எமது மக்களை ஏமாற்றுவதற்கோ பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்கோ நான் விரும்பவில்லை
இந்த தேசிய அரசாங்கம் வருகின்ற தேர்தலுக்கு பினனரும் ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கத்தினை எவராலும் அசைக்க முடியாது இந்த அராசாங்கம் எமது மக்களுக்காகவே இன்றும் எதிர்வரும் காலங்களிலும் சேவையாற்ற இருக்கின்றது. கடந்த காலங்களில் நான் பிரதியமைச்சராக இருக்கின்ற காலத்தில் எனது அமைச்சில் போதிய நிதியிருந்தும் இப்பிரதேசங்களை என்னால் அபிவிருத்தி செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம் கொடிய யுத்தமே இப்பிரதேசங்களுக்கு வந்து செல்வதற்கு எமக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தது இருந்தாலும் அதிகமான நிதிகளை கொண்டு எழுவான்கரை பிரதேசங்களை என்னால் அபிவிருத்தி செய்ய முடிந்தது.
அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்து அவர்களது கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு தளங்குடாவில் பாரிய கல்வியல் கல்லூரி ஒன்றினை நிறுவினேன் இன்று அந்தக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியினை முடித்து விட்டு இன்று சமுகத்தில் ஆசிரியர்களாக மாணவர்களுக்கு கல்வியினை புகட்டுகின்றனர்.
என்னால் முடிந்தவரை போரினால் மிகவும் பாதிக்கப்பட் படுவான்கரை பிரதேசத்தை ஒரு நகரப்புறம்போல் மாற்றுவேன் விரைவில் அனைத்து மக்களும் பயன்பெறக்குகூடிய வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கோ தரமுயர்த்துவதற்கோ திட்டமிட்டுள்ளேன் எனத்தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours