பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்குள்ளாக்குவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.
2018 – 2019 கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் தொடர்புபடும் மாணவர்களையும் இந்த செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக இருப்பினும் அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours