மருத்துவத் துறையில் முதலிடம் பெற்ற மஹ்மூத் மாணவி பாத்திமா ஸப்றீனுக்கு பாராட்டு !
அட்டாளைச்சேனை மஸ்ஜிதுஸ் ஷறப் பள்ளிவாசலின் மேல்தள நிர்மாண பணிகளுக்காக எச்.எம்.எம்.ஹரீஸ் நிதி ஒதுக்கினார் !
கல்லடியில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனனதினம் அனுஸ்டிப்பு.
மட்டக்களப்பில் உள்ளூர் தேர்தலை சுமுகமாகவும், சுதந்திரமாகவும் ,நடாத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்கவும்.மட்டு.அரசாங்க அதிபர் கோரிக்கை
திருக்கோவில் தூய சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா கோலாகலமாக ஆரம்பம் !
(த.தவக்குமார்)
மண்டூர் அருள்மணி விளையாட்டுகழகத்தின் 35வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்தும் மாபெரும் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி மற்றும் கலை,கலாச்சார விளையாட்டுப் போட்டியும் அருள்மணி விளையாட்டு மைதானத்தில் தலைவர் என்.பிரசன்னா தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிதிகளை வரவேற்கும் நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக பிரதம அதிதியாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும்,தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் பிரதேச செயலக இணை ஒருங்கிணைப்பு தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களும் விசேட அதிதிகளாக போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களும்,சிறப்பு அதிதிகளாக திருக்கோயில் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.திருச்செல்வம்,வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஏ.என்.டயஸ்.அதிபர் எஸ்.தம்பிப்பிள்ளை,அதிபர்.வ.ஜெயந்தி, ஆன்மீக மற்றும் கௌரவ அதிதிகளாக ஆலய பூசகர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கிரம சேவை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
அன்றைய விளையாட்டு நிகழ்வில் கலை,கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நடைபெற்றதோடு புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழம் தெரிவாகிய மாணவர்களை கௌரவித்தும் கிறிக்கற்,உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பெறுமதிவாய்நத் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours