சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியொன்றில் அடுத்தடுத்த 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை டீ - 20 அணியிண் தலைவர் லசித் மாலிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (06) கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது டீ - 20 போட்டியின் போது நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நால்வரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்தே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 
அத்துடன், நியூசிலாந்து அணியின், கொலின் முன்ட்ரோவை ஆட்டமிழக்ச் செய்ததன் மூலம் டீ -20 போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை (100) வீழ்த்தியுள்ள வீரர் என்ற இலக்கையும் மாலிங்க அடைந்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours