மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
(காரைதீவு நிருபர்சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு நிகழ்வு இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
சுமார் தொள்ளாயிரம் பக்தர்கள் மஞ்சள்குளித்து இத்தீமிதிப்பு வைபவத்தில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைபவத்தை ஆலயத்தலைவர் சீ.சுப்பிரமணியம் முன்னிலையில் பார்த்து மகிழ்ந்தனர்.
கடந்த 20ஆம்திகதி திருக்கதவு திறத்தலுவுடன் ஆரம்பமான இவ்வாலய தீமிதிப்பு மஹோற்சவம் தொடர்ந்து 9தினங்கள் சடங்குகள் காரைதீவு கண்ணகைஅம்பாள் ஆலயத்தின் முன்னாள் கப்புகனார் க.பாஸ்கரனின் ஆசீர்வாதத்துடன் ஆலய பிரதமபூசகர் கு.லோகேஸ் தலைமையில் நடைபெற்று வந்தன.
கடந்த 22ஆம் திகதி பாற்குடபவனியும் 26ஆம் திகதி வீரகம்பம் வெட்டலும் நடைபெற்று 28ஆம் திகதி மதியம் சக்தி பூஜையும் மாலை நோற்புநூல்க்கட்டலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours