ஆலையடிவேம்பில் தமிழரசு தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு
அரசியலமைப்பை மாற்றா விட்டால் தமிழருக்கு ஒருபோதும் தீர்வு இல்லை; தமிழ்க் கட்சியுடன் மட்டும் இணைந்து ஆட்சி அமைப்போம்! காரைதீவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயலாளர் குருபரன் தெரிவிப்பு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!
மட்டக்களப்பு சந்திவெளி-திகிலிவெட்டை இடையிலான இயந்திரப் படகுப்பாதை மீள ஆரம்பம்.
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
(காரைதீவு நிருபர் சகா)
சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பன்பிட்டிய இல 01 எனும் தோட்டத்தில் வசிக்கும் செல்வன் ரவிகுமார் ஹரினாஸ் 157 புள்ளிகளை பெற்று இவ்வாறு வரலாற்று சாதனை படைத்தவராவார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் இலக்கு பிரதேசங்களில் ஒன்றான அம்பன்பிட்டிய இல 01 தோட்டத்தில் மனித அபிவிருத்தி தாபனம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக இங்கு சிறுவர் குழு அமைக்கப்பட்டு, கல்விற்கான உரிமையையும், கல்விற்கான முன்னுரிமையையும் ஏற்படுத்துவதில் கரிசனையோடு, மனித அபிவிருத்தி தாபனம் ஈடுபட்டு வருகின்றது.
சிறுவர் குழுவின் தலைவரான செல்வன் ரவிகுமார் ஹரினாஸ் வரலாற்றில் முதல் தடவையாக இத்தோட்டத்தில் தரம் 05ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தி பெற்று இப்பிரதேசத்திற்கும், சிறுவர் குழுவிற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் அம்பன்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் கல்விக்கற்பதுடன் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இச்சாதனையை படைத்து ஏனைய மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக காணப்படுகின்றது.
மனித அபிவிருத்தி தாபனத்தின் திட்ட இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் மற்றும் குழுவினர் உள்ள சிறுவர் கழகங்களின் தரம் 05ம் ஆண்டு புலமைபரிசில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் சாதனை மாணவர்களான செல்வன் ரவிகுமார் ஹரினாஸ் உட்பட அம்பன்பிட்டிய 04 ஆம் பிரிவில் சிறுவர் குழு உறுப்பினர் செல்வி.ஏ.பீ.சுசந்திகா 166 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவியையும் இணைத்து, 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 05 மாணவர்களுக்கும் கற்கை உபகரணங்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி, கௌரவித்து பாராட்டப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours