(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை  முன்னெடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் இன்று திங்கட்கிழமை(14)காலை 11.45 மணியளவில் நூற்றி ஒன்று(101)தேர்தல் மக்கள் பணியகம் திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் அதிரடியாக மட்டக்களப்பு வாவிக்கரை தலைமைச் செயலகத்தில் பிரதான நிகழ்வுகள் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் நா.திரவியம்(ஜெயம்),தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித்,மகளீர் அணித்தலைவி செல்வி மனோகர்,கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையச் செய்வதற்கும்,தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கும்,இன்று மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் 101தேர்தல் மக்கள் பணியகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைச்செயலகம் மற்றும் வாகரை,வாழைச்சேனை,கல்குடா, செங்கலடி,மட்டக்களப்பு நகரம்,கல்லடி, மாமங்கம், கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, வவுணதீவு,ஆரையம்பதி,போன்ற இடங்களில் இன்று இவ்வாறு தேர்தல்கள் பிரச்சார அலுவலகங்கள் ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டது. இன்றைய தினமே  கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்கு சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours