(த.தவக்குமார்)
மண்டூர் தம்பலவத்தை வினாயகர்  விளையாட்டுகழகத்தின் 56வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்தும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி  வினாயகர் விளையாட்டு மைதானத்தில் தலைவர் அ.வேணுகோபன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிதிகளை வரவேற்கும் நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக பிரதம அதிதியாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும்,தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் பிரதேச செயலக இணை ஒருங்கிணைப்பு தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களும் பாடசாலை அதிபர்,கிராமவேவை உத்தியோகத்தர்,ஆலயக் குருக்கள்,போரதீவுப்பற்று பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் இணைப்பாளர் பொ.பேரின்பம்,கிராமமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள்,கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அன்றைய இறுதி சுற்றுப்போட்டியில் தெரிவாகிய கொக்கட்டுச்சோலை ஸ்வாரா விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தினையும்,மண்டூர் கணேசபுரம் கண்ணகி விளையாட்டு கழகத்தினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர் இவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.












Share To:

Post A Comment:

0 comments so far,add yours