மட்டக்களப்புசுற்றாடலில் ஏற்படும் பாதிப்புக்களைதீர்த்துவைக்கவும் மற்றும் சுற்றாடலைபாதுகாக்கும் முகமாகமட்டக்களப்பு  மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் மேலதிகஅரசாங்கஅதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இன்றுகாலை 9.30 மணிக்கு (22) கூட்டம் நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் எதிர்நோக்கும் சுற்றாடல் பிரச்சனைகளைவிவரமாகஆராயப்பட்டதுடன் எதிர் காலத்தில் இம் மாவட்டத்தில் சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கும் சவால்களுக்குஅதிகாரசபை,பிரதேசசெயலகம்,உள்ளுராட்சிமன்றம்,சுற்றாடல் வளர்ச்சியில் சம்பந்தப்பட்டஅரசதிணைக்களங்கள் கவனம் செலுத்தவேண்டும் எனதீர்மானிக்கப்பட்டது.
இத்துடன் பிரதேசஅபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைள் பற்றியும் ஆராயப்பட்டது.மத்தியசுற்றாடல் அதிகாரசபைஉதவிப்பணிப்பாளர் கே.கோகுலராஜ் இம் மாவட்டத்தில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைவிபரமாகஎடுத்துரைத்தார்.

அத்துடன் கரையோரபோரல்  திணைக்களம்,சுகாதாரதிணைக்களம்,உள்ளுராட்சிசபைகள் எதிர் நோக்குகின்றசுற்றாடல் பிரச்சனைகளைஎடுத்துநோக்கிஅதற்குரியதீர்வுகளைஎடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலாபுண்ணியமூர்த்திஉட்படஅரசதிணைக்களதலைவர்கள்,உள்ளுராட்சிதலைவர்கள் ,மற்றும் பிரதேசசெயலாளர்கள் கலந்துகொண்டனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours