நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை, வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த “Bulbul” என்ற சூறாவளியானது ஒருகடும் சூறாவளியாக விருத்தியடைந்துவட அகலாங்கு 17.2N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.6E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு மிகக் கடும் சூறாவளியாக விருத்தியடைவதுடன் வடக்கு - வடமேற்கு திசையில் மேற்கு வங்காளம் (இந்தியா) - பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வட அகலாங்கு 15N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83E - 94E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
Post A Comment:
0 comments so far,add yours